நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி!

பிரபல இந்தி மற்றும் மராத்திய நடிகரும் தயாரிப்பாளருமான ஷ்ரேயாஸ் தல்படேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு தற்போது நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவ்
நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவ்முகநூல்

இந்தி மற்றும் மராத்திய மொழிகளில் பிரபலமான நடிகரும் தயாரிப்பாளருமானவர் 47 வயதான ஷ்ரேயாஸ் தல்படே. ஓம் சாந்தி ஓம், கோல்மால், இக்பால் போன்ற திரைப்படங்களின் மூலமாக திரையுலகில் தனக்கென தடம் பதித்தவர் இவர்.

இந்நிலையில் நேற்று மாலை மும்பையில் “வெல்கம் டூ ஜங்கிள்” என்ற படத்தின் படப்பிடிப்பின் போது தீடீரென மயங்கி விழுந்துள்ளார் ஷ்ரேயாஸ்.

நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவ்
”உங்கள் இதயத்தை பலமாக வைத்திருங்கள்” - மாரடைப்பு ஏற்பட்டதாக சுஷ்மிதா சென் அதிர்ச்சி தகவல்!

உடனடியாக அருகில் இருந்த அந்தேரி பகுதியில் உள்ள பெல்லூவ் மருத்துவமனைக்கு இவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கிவிழுந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இரவு 10 மணி அளவில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது.

மருத்துவ நிர்வாகம், ”இப்போது ஷ்ரேயாஸ் நலமுடன் இருக்கிறார். இன்னும் சில நாட்கள் இவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும், இதன் பின்னர் டிஸ்சார்ச் செய்யப்படுவார்” என்று தெரிவித்துள்ளது.

நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவ்
சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்துக்கு வந்த தடை! முழு விவரம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com