அயலான் - ஆலம்பனா
அயலான் - ஆலம்பனாபுதிய தலைமுறை

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்துக்கு வந்த தடை! முழு விவரம்...

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தினையும் வைபவ் நடித்துள்ள ‘ஆலம்பனா’ திரைப்படத்தினையும் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Published on

செய்தியாளர் - முகேஷ்

----

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தினை 24 ஏ.எம் என்ற தயாரிப்பு நிறுவனம் முதலில் தயாரித்தது. அந்நிறுவனம் தயாரிப்பு பணிக்காக டி.எஸ்.ஆர் நிறுவனத்திடம் இருந்து 10 கோடி ரூபாயை கடனாக பெற்றிருந்தது. ஆனால் கடன் தொகையை 24 ஏ.எம் நிறுவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அதற்கு கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் பொறுப்பேற்று முதல்கட்டமாக 3 கோடி ரூபாயை செலுத்தியது.

அயலான்
அயலான்

அதுமட்டுமல்லாது மீதத்தொகையை அயலான் அல்லது வேறு எந்த படமாக இருந்தாலும் அதன் வெளியீட்டுக்கு முன் திருப்பித் தருவதாக 2021ல் ஒப்பந்தம் செய்து கொண்டது.

அயலான் - ஆலம்பனா
Fight Club | கண்ணகி | வீரப்பன் | ஒரே வாரத்துல இத்தனையா..?

ஆனால் இந்த ஒப்பந்தத்தினை மீறி கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனம் ரூ.14.70 கோடி கடனை திருப்பி தராமல் அயலான் படத்தினை அடுத்த மாதமும் (பொங்கல் நாளில்), வைபவ் நடித்த ஆலம்பனா திரைப்படத்தினை இன்றும் வெளியிட முயற்சித்துள்ளது. இதையடுத்து இதுதொடர்பாக டி.எஸ்.ஆர்.பிலிம்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.

இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி இரு படங்களையும் நான்கு வாரங்களுக்கு வெளியிட தடை விதித்தும், இதற்கு பதிலளிக்கும்படி கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டும் இவ்வழக்கினை ஜனவரி 9 ஆம் தேதி தள்ளி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com