\
சென்னையில் துவங்கிய கமல்ஹாசனின் ‘விக்ரம்’ மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு

சென்னையில் துவங்கிய கமல்ஹாசனின் ‘விக்ரம்’ மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு

சென்னையில் துவங்கிய கமல்ஹாசனின் ‘விக்ரம்’ மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு
Published on

கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தின் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

’மாஸ்டர்’ வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இரண்டு வாரங்கள் படக்குழுவிற்கு பிரேக் விடப்பட்டது. இதுவரை 25 சதவீத காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு.

இந்த நிலையில், இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கியது. இதில், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, கமல்ஹாசன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com