Actor Dileep Acquitted In 2017 Actress Assault Case
Actor Dileep Acquitted In 2017 Actress Assault Casept web

”எனக்கு எதிரான சதி” | நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு - நடிகர் திலீப் விடுவிப்பு; முழுவிபரம்

கேரள மாநிலம் கொச்சியில் 2017ஆம் ஆண்டு பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Published on

கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு, நீதித்துறை மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் நடிகர் திலீப் இருப்பதாகக் கூறப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் நடிகையின் உதவியாளர் மற்றும் நடிகர் திலீப் உட்பட மொத்தம் 10 பேர் குற்றவாளிகளாகப் பட்டியலிடப்பட்டு நடைபெற்ற வந்த விசாரணை முடிந்ததையடுத்து, எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி நடிகர் திலீப்பை நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வழக்கில் 7ஆவது குற்றவாளி சரத் மற்றும் 8ஆவது குற்றவாளியான திலீப் ஆகியோரை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நடிகையின் கார் ஓட்டுநரும் அவரது உதவியாளருமான சுனில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். மார்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜேஷ், சலீம், பிரதீப் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளாது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் டிச.12ஆம் தேதி அறிவிக்கப்படும் என எர்ணாகுளம் நீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது.

நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பாதிக்கப்பட்ட நடிகையின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

“எனக்கு எதிராக சதி” - நடிகர் திலீப்

இந்த வழக்கில் மஞ்சுவாரியர் தான் முதன்முதலாக எனக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டு சதியை முன்மொழிந்தார். அதன்பிறகுதான் எனக்கு எதிராக சதி தொடங்கியது. முதன்மை குற்றவாளி நற்ற்ய்ன் அவரது சிறை கைதிளுடன் இணைந்து எனக்கு எதிராக காவல்துறையினரும் போலியான கதைகளை உருவாகினார்கள். இந்த போலியான கதைகளை சமூக வலைதளங்களில் உலாவவிட்டனர். ஆனால், நீதிமன்றத்தில் எனக்கு எதிரான போலியான கதைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்த 9 வருடத்தில் சமூகத்தில் என்னுடைய மதிப்பும், என்னுடைய வாழ்க்கையும் சரிந்தது.

வழக்கில் நடந்தது என்ன?

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி, காரில் கடத்திச்செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் அதை வீடியோவும் எடுத்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் திலீப் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி கைது செய்யப்பட்டு, கொச்சி ஆலுவா கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

சக நடிகை ஒருவரை கூலிப்படை அமர்த்தி நடிகர் திலீப் செய்த கொடுமையை கண்டித்து கேரளா மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்களும், கொடும்பாவி எரிப்பு சம்பவங்களும் அப்போது நடந்தன. 85 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 3ம் தேதி நடிகர் திலீப்பிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்.

திலீப் 8வது குற்றவாளியாக சேர்ப்பு

இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி கேரள போலீஸார் கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் 14வது குற்றவாளியாக இருந்த நடிகர் திலீப் குற்றப்பத்திரிகையில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். குற்றப்பத்திரிகையோடு, ஓடும் காரில் நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் வழக்கின் முக்கிய ஆவணங்களாக நீதிமன்றத்தில் போலீஸாரால் சமர்ப்பிக்கப்பட்டன.

போலீஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, பாலியல் துன்புறுத்தல் வீடியோ காட்சிகளில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், இதை நிருபிக்க அந்த வீடியோ காட்சிகளை தனக்கு வழங்குமாறும் நடிகர் திலீப் கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 2018 ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, “நடிகர் திலிப்பிற்கு வீடியோ காட்சிகளை வழங்கினால் அது வெளியில் பரவுவதற்கும், சம்பந்தப்பட்ட நடிகையை மிரட்டுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது” என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

Actor Dileep Acquitted In 2017 Actress Assault Case
”தமிழ்நாட்டில் இருந்து திமுக துடைத்து எறியப்படும்” - மத்திய அமைச்சர் அமித் ஷா நேரடி சவால்!

திலீப் மனு தள்ளுபடி

அரசு தரப்பு வாதத்தை ஏற்ற கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நடிகை பாலியல் துன்புறுத்தல் வீடியோ காட்சிகளை வழங்க முடியாது எனவும், வீடியோ காட்சிகளை வழங்க கோரிய நடிகர் திலீப்பின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. இதையடுத்து நடிகர் திலீப், வீடியோ காட்சிகளை தனக்கு வழங்க கோரி கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் வீடியோ காட்சகிளை நடிகர் திலீப் உட்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆறு பேரும் கூட்டாக காண அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் நடுவே மலையாள சினிமாவின் சக்திவாய்ந்த ஒரு பிரிவினரின் தனிப்பட்ட பழிவாங்கல் எண்ணத்தின் காரணமாகவும், தொழில் போட்டி காரணமாகவும் வழக்கு புனையப்பட்டுள்ளதாக நடிகர் திலீப் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Dileep Acquitted In 2017 Actress Assault Case
கொடூர வில்லனாக மம்மூட்டி... எப்படி இருக்கிறது `களம்காவல்'? | Kalamkaval Review | Mammootty

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com