\
Abhijeet Dipke’s Father Slams Delhi Police Over Protest Crackdown
அபிஜீத் திப்கேANI

போர்க்களமாகும் டெல்லி.. ”மாணவர்கள் சம்பல் கொள்ளையர்களா.?” - அபிஜித் தந்தை காட்டம்

“சம்பல் கொள்ளையர்களா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்? உண்மையான கொள்ளையர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள்” என அபிஜீத் திப்கேவின் தந்தை டெல்லி போலீசாரின் நடவடிக்கையைகடுமையாக விமர்சித்துள்ளார்.
Published on: 

நீட் முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் நடத்தப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் வெற்றி பெற்றது. தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இந்தச் சம்பவம் முடிவடைந்த சில மாதங்களிலேயே, SIR விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக பல்வேறு முடிவுகளை எடுத்ததாக மற்ற இரு தேர்தல் ஆணையர்கள் குற்றம் சாட்டியது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சிஜெபி போராட்டம் கோப்புபடம்
சிஜெபி போராட்டம் கோப்புபடம்ANI

இந்தச் சூழலில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடைபெறும் என கரப்பான் ஜனதா கட்சி அறிவித்தது.

இந்தப் போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை தடை விதித்த நிலையில், நேற்று இரவில் இருந்து, இன்று காலை வரை டெல்லி வந்து சேரும் பல விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டன. மேலும், டெல்லி முழுவதும் 4,000 பெண் போலீசார் உள்ளிட்ட 14,000 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Abhijeet Dipke’s Father Slams Delhi Police Over Protest Crackdown
சேலையில் வெறும் கால்களுடன்.. 1,600 மீட்டர் ஓடிய சிங்கப்பெண்.. நாடே திரும்பி பார்க்க வைத்த கதை..

டெல்லி விமான நிலையத்திலேயே கரப்பான் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே தடுத்து நிறுத்தப்பட்டார். தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்களான மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 5,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச்சூழலில் தான், செய்தியாளர்களிடம் பேசிய அபிஜீத் திப்கேவின் தந்தை பகவான்ராவ் திப்கே, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஏன் இவ்வளவு பெரிய அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அபிஜீத் திப்கே
அபிஜீத் திப்கேANI

மேலும், “மாணவர்கள் என்ன சம்பல் கொள்ளையர்களா? உண்மையான கொள்ளையர்கள் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள்” எனவும் இந்தியக் குடிமக்களுக்கு சட்டப்படி போராட்டம் நடத்த உரிமை இருக்கும்போது, அதற்கு ஏன் அனுமதி பெற வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த அனுமதி பெற வேண்டிய சூழல் இருப்பது ஜனநாயகத்தின் செயல்பாடு குறித்த கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் விமர்சித்தார். அதேபோல், அபிஜீத் தீப்கேவின் தாயார் அனிதா தீப்கேவும் தனது மகனை விமானத்திலேயே போலீசார் காவலில் எடுத்தது தவறான நடவடிக்கை எனக் கண்டித்திருக்கிறார்.

Abhijeet Dipke’s Father Slams Delhi Police Over Protest Crackdown
”அறிவிக்கப்படாத அவசரநிலை..” சோனம் வாங்சுக் எச்சரிக்கை!! மீண்டும் உண்ணாவிரதம்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com