சுவாதி மாலிவால், அரவிந்த் கெஜ்ரிவால்
சுவாதி மாலிவால், அரவிந்த் கெஜ்ரிவால்pt web

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதன் காரணம் என்ன? கட்சி வட்டாரத்தில் பேசப்படுவது என்ன?

ஆம்ஆத்மி எம்பி ஸ்வாதி மலிவால் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததால் அவர் மீது தாக்குதல் நடைபெற்றதாக அக்கட்சித்தரப்பில் கூறப்படுகிறது. இதன் பின்னணியை அலசுகிறது இச்செய்தித் தொகுப்பு

பரபரப்பான தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் சரமாரியாக புகார்களை தொடுத்து வருகின்றன. ஆனால் எதிர்பாராதவிதமாக ஆம்ஆத்மி கட்சி எம்பி கூறிய புகாரால் அக்கட்சி தலைமைக்கே தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்pt web

சிறையிலிருந்து வெளியே வந்துள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, கடந்த திங்கள்கிழமை ஆம்ஆத்மி எம்பி ஸ்வாதி மலிவால் சென்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபாவ் குமார், மலிவாலை தாக்கியதாக புகார் எழுந்தது. கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவரும் நேரடி உதவியாளருமான பிபாவ் இச்செயலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். மேலும், பிபாவ் குமார் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்வாதி மலிவாலை பிபாவ் ஏன் அடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதிலாக ஆம்ஆத்மி தரப்பில் சில தகவல்கள் பேசப்படுகின்றன.

சுவாதி மாலிவால், அரவிந்த் கெஜ்ரிவால்
காரில் இருந்த குழந்தை.. கவனிக்காமல் பூட்டிய தந்தை.. ராஜஸ்தான் திருமண நிகழ்ச்சியில் நிகழ்ந்த சோகம்!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சிறையிலிருந்து கெஜ்ரிவால் வெளிவர வாதாடினார். அதில் வெற்றியும் பெற்றுத்தந்தார். இதற்கு கைமாறாக தன்னை மாநிலங்களவை உறுப்பினராக்க அபிஷேக் மனு சிங்வி கோரியதாகவும் இதற்கு கெஜ்ரிவால் சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது. அபிஷேக் மனு சிங்விக்கு வழி விடும் விதமாக எம்.பி.பதவியிலிருந்து விலக ஸ்வாதி மலிவாலை கட்சித் தலைமை வலியுறுத்தியதாகவும் ஆம்ஆத்மி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பதவியை ராஜினாமா செய்ய மலிவால் மறுத்ததால்தான் வாக்குவாதம் ஏற்பட்டு அவரை பிபாவ் தாக்கியதுடன் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோது அதை எதிர்த்து கட்சி எம்பிக்கள் பலர் கண்டனம் தெரிவிக்கவில்லை, போராட்டம் நடத்தவில்லை என்று ஆம்ஆத்மி தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பதவியில் இருந்து விலக அழுத்தம் தர ஆம்ஆத்மி தலைமை முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன..

சுவாதி மாலிவால், அரவிந்த் கெஜ்ரிவால்
9 வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய்| வீடியோ எடுத்த தந்தை.. போலீஸில் புகார்! #Viralvideo

இதற்கிடையே, லக்னோவில் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சுவாதி மாலிவால் விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவாலிடம் செய்தியாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு பதில் அளிக்க கெஜ்ரிவால் மறுத்துவிட்டார்.

சுவாதி மாலிவால், அரவிந்த் கெஜ்ரிவால்
ஆன்லைன் மூலம் ‘WFH’ வேலை.. 4 நாட்களில் 54 லட்சம் இழந்த பெண்! 'Maternity' விடுப்பில் நிகழ்ந்த சோகம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com