காரில் இருந்த குழந்தை.. கவனிக்காமல் பூட்டிய தந்தை.. ராஜஸ்தான் திருமண நிகழ்ச்சியில் நிகழ்ந்த சோகம்!

ராஜஸ்தானில் பெற்றோரின் அலட்சியத்தால் 3 வயதுக் குழந்தை ஒன்றின் உயிர் பறிபோயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
model image
model imagefreepik

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரதீப் சாகர். இவர், ஜோரவர்புரா கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் காரில் சென்றுள்ளார். திருமணம் நடைபெறும் இடத்தை அடைந்ததும், பிரதீப் சாகரின் மனைவியும் அவரது மூத்த மகளும் காரைவிட்டு இறங்கியுள்ளனர். அவர்களுடைய 3 வயது இரண்டாவது மகள் கோர்விகாவும் காரில் இருந்து இறங்கிவிட்டதாக நினைத்து, பிரதீப் சாகர் காரை பார்க்கிங் பகுதியில் போய் நிறுத்தி லாக் செய்துவிட்டு வந்துவிட்டார்.

model image
model imagefreepik

இரண்டு குழந்தைகளும் மனைவியுடன் இருப்பதாக நினைத்து உள்ளே சென்ற பிரதீப் சாகர் வெகுநேரமாக அவர்களைச் சந்திக்கவில்லை. உறவினர்களைச் சந்தித்துப் பேசுவதிலேயே பிஸியாக இருந்துள்ளார். அதேபோல், பிரதீப் சாகரின் மனைவியும் தன்னுடைய இரண்டாவது மகள் தன் கணவரிடம் இருப்பதாக நினைத்துக் கொண்டார்.

இதையும் படிக்க: CSK Vs RCB | மே18 80% மழைக்கு வாய்ப்பு இருக்கு.. ஒருவேளை மழை குறுக்கிட்டால் என்னவெல்லாம் நடக்கலாம்!

இப்படியே அவர்கள் இருவரும் சுமார் 2 மணி நேரம் உறவினர்களிடம் பேசிய நிலையில், அதன்பிறகு இவர்கள் சந்தித்தபோது கோர்விகா பற்றி ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டபோதுதான் குழந்தை காணாமல் போன விவரம் தெரியவந்துள்ளது. அதன்பிறகு, குழந்தையைத் தேட ஆரம்பித்த அவர்கள், இறுதியாக காரை திறந்து பார்த்துள்ளனர். அதில் குழந்தை மூச்சுத்திணறி அசைவற்ற நிலையில் கிடந்தது.

மாதிரிப் படம்
மாதிரிப் படம்ட்விட்டர்

இதையடுத்து, குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை மூச்சுத்திணறி இறந்ததை உணர்ந்த கணவன் - மனைவி இருவரும் கதறி துடித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், கடந்த மாதம் மும்பையில் நிறுத்தப்பட்ட காரில் ஏறி விளையாடிய இரு குழந்தைகள், கார் கதவைத் திறக்க முடியாமல் மூச்சுத் திணறி இறந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”நீங்க அத செஞ்சா தான் என் காதல சொல்லுவேன்” - பெண் ரசிகை வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய காம்பீர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com