"ஏர் பிரஷர் பைப்" மூலம் ஆசனவாயிலில் காற்று பிடித்து விபரீத விளையாட்டு; குடல் வெடித்து பலியான இளைஞர்!

பெங்களூருவில் பைக் சர்வீஸ் சென்டரில் "ஏர் பிரஷர் பைப்" மூலம் ஆசனவாயில் காற்று பிடித்த சம்பவத்தில், இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 உயிரிழந்த யோகேஷ்
உயிரிழந்த யோகேஷ் pt web

ஓசூர்  - ம.ஜெகன்நாத் 

கர்நாடக மாநில விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் யோகேஷ் 28. இவர் பெங்களூருவில் தங்கி டெலிவரி ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். யோகேஷ் தன்னுடைய இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்வதற்காக பெங்களூரு சம்பிகேஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பைக் சர்வீஸ் சென்டரில் பைக்கை சர்வீஸ்க்கு விட்டுள்ளார். அந்த சர்வீஸ் சென்டரில் யோகேஷ் நண்பன் முரளி என்ற இளைஞர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், நண்பர்கள் இருவரும் குறும்புத் தனம் செய்வதில், ஈடுபட்டுள்ளனர். அப்போது சர்வீஸ் சென்டரில் இருந்த "ஏர் பிரஷர் பைப்பை" எடுத்து இருவரும் விளையாடத் தொடங்கியுள்ளனர். இதில் முரளி அந்த "ஏர் பைப்பை" வைத்து முதலில் யோகேஷ் முகம் மற்றும் வயிற்றுப் பகுதியில் காற்று விட்டு விளையாடிய அவர் யோகேஷ் , ஒருகட்டத்தில் ஆசனவாயில் "ஏர் பிரசர் பைப்" மூலமாகக் காற்று பிடித்துள்ளார்.

 உயிரிழந்த யோகேஷ்
தேனி : கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபரீத முடிவு; சோகத்தில் கிராமம்!
யோகேஷ் - முரளி
யோகேஷ் - முரளி

குடல் வெடித்து உயிரிழந்த இளைஞர்

இதில் ஆசன வாய் மூலமாகக் காற்று உள்ளே சென்று, யோகேஷ் வயிறு பெரிதாக மாறி, குடல் வெடித்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த யோகேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே யோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முரளியைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளையாட்டாகச் செய்த சம்பவம், விபரீதமாக மாறி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 உயிரிழந்த யோகேஷ்
"யாசகம் பெற்ற பணம் சார்" - ரூ.1.50 லட்சம் பணத்துடன் மதுபோதையில் தள்ளாடிய பெண்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com