a viral video on rajasthan oldest man on a horse delivering Blinkit orders
dekuvery horse manweb

ராஜஸ்தான் | குதிரையில் ஆன்லைன் நிறுவன டெலிவரி.. #ViralVideo

ராஜஸ்தானில் குதிரையில் சவாரி செய்து ஆன்லைன் நிறுவன ஆர்டர்களை விநியோகம் செய்யும் பெரியவர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on

ராஜஸ்தானில் குதிரையில் சவாரி செய்து 'பிளிங்கிட் நிறுவனத்தின் ஆர்டர்களை டெலிவரி செய்கிறார்' பெரியவர் ஒருவர். டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் பிளிங்கிட், ஸ்விக்கி அல்லது ஜெப்டோ பைகளை முதுகில் சுமந்துகொண்டு சாலைகளில் பயணிப்பது பல நகரங்களில் பழக்கமான வழக்கமான காட்சியாகும். ராஜஸ்தானில் ஆர்டர்களை டெலிவரி செய்வதற்காக, பிளிங்கிட் பையை சுமந்து குதிரையில் சவாரி செய்யும் ஒரு முதியவரின் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது

வைரல் வீடியோவில், ராஜஸ்தானில் ஒரு சாலையின் ஓரத்தில் அந்த நபர் கறுப்பு நிற குதிரை ஒன்றில் சவாரி செய்வதைக் காணலாம். அந்த இடம் புறநகர்ப் பகுதியாகத் தெரிகிறது. ஒரு பக்கத்தில் பச்சை வயல்கள், தூரத்தில் சில சிதறிய கட்டடங்கள் மட்டும் இருக்கிறது. பாரம்பரிய உடை மற்றும் தலைப்பாகை அணிந்திருக்கும் அந்த நபர், கடிவாளத்தைப் பிடித்து குதிரை மீது அமர்ந்து செல்கிறார். ​​பிரகாசமான மஞ்சள் நிற பிளிங்கிட் டெலிவரி பையை முதுகில் சுமந்துகொண்டு சவாரி செய்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

a viral video on rajasthan oldest man on a horse delivering Blinkit orders
எருமைப் பாலா.. பசும்பாலா? IQவிற்குச் சிறந்தது எது? ராஜஸ்தான் அமைச்சரின் கருத்தால் சர்ச்சை!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com