உடல், மனநலச் சிக்கலால் அவதி.. மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு விபரீத முடிவை எடுத்த நபர்!

வினோத்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சிறுநீரக தொற்றுநோய் ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக வினோத் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு நோய் சரியான நிலையில் தான் வேலையை விட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இறந்த தம்பதி
இறந்த தம்பதிPT

காஜியாபாத், மாநிலம், ரூர்கியைச்சேர்ந்தவர் வினோத் சௌத்ரி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். பிறகு வேலையை விட்டுவிட்டு தனது கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு விட்டு அதில் வருமானம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி தீபக். இத்தம்பதியினருக்கு ஒருமகனும் ஒரு மகளும் இருக்கின்றனர்.

வினோத்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சிறுநீரக தொற்றுநோய் ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக வினோத் மருத்துவசிகிச்சை மேற்கொண்டு நோய் சரியான நிலையில் தான் வேலையை விட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இறந்த தம்பதி
என்னோட குடும்பத்த நீங்கதான் பார்த்துக்கணும்.. நண்பர்களுக்கு ஆடியோ அனுப்பிவிட்டு உயிரைவிட்ட இளைஞர்!

ஆனால், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மீண்டும் வினோத்திற்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு , உடல் நலகுறைவும் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்துள்ளார் வினோத். இதில் வாழ்க்கையை வெறுத்து தன்னை மாய்த்துக்கொள்ள முடிவு செய்த வினோத் கால்வாயில் விழுந்து உயிரை விட முயற்சித்தபொழுது வினோத்தின் நண்பன் ஒருவர் வினோத்தை காப்பாற்றி அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்ததுடன், வினோத்திற்கு மனநல சிகிச்சை அளிக்குமாறு கூறியுள்ளார்.

ஆனால் வினோத் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்று தெரிய வருகிறது. தொடர்ந்து அவர் மன அழுத்தத்திலேயே இருந்துள்ளார். ஒரு முறை தனது சகோதரியிடம் தான் உயிரைமாய்த்துக்கொள்ள இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் வினோத்திற்கு பீனு என்ற நண்பர் ஒருவர் இருந்திருக்கிறார் அவரிடமிருந்து கடந்த வாரம் துப்பாக்கி ஒன்றை வாங்கிய வினோத் அதை தனது காரில் மறைத்தும் வைத்திருக்கிறார்.

NGMPC22 - 147

கடந்த செவ்வாய்கிழமையன்று மதுபன் பாபுதாம் என்ற இடத்திற்கு அருகில் ஒரு காரில் தம்பதியர் இறந்து கிடப்பதாக போலிசாருக்கு தகவல் வரவே, சம்பந்த பட்ட இடத்திற்கு வந்த போலிசார் இறந்து கிடப்பது வினோத் மற்றும் அவரது மனைவி தீபக் என்று தெரிந்துக்கொண்டனர். தீபக் காருக்கு வெளியேவும், வினோத் காருக்குள்ளும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதில் வினோத் கையில் துப்பாக்கி இருந்ததால், வினோத் தனது மனைவி தீபக்கை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கக்கூடும் என்ற அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் வினோத்திற்கு துப்பாக்கி கொடுத்த பீனுவை போலிசார் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com