\
TVK into the INDIA bloc
TVK into the INDIA blocTVK Join india bloc

'INDIA கூட்டணியில் TVK'| வரவேற்ற முக்கிய கூட்டணி கட்சி.. அதிர்ச்சியில் திமுக!

இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ள நிலையில், அந்த இடத்தில் தவெக வந்துள்ளதாக இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி வரவேற்றுள்ளது.
Published on
Summary

இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகி, டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என அறிவித்துள்ள நிலையில், திமுகவுக்கு பதிலாக தவெக கட்சியை வரவேற்கிறோம் என்று சிவசேனா அறிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக களமாடும் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கவேண்டும் என்ற நோக்கில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகளும் இணைந்தன.

இந்த கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில், அதனை எல்லாம் சரி செய்து இப்படி ஒரு கூட்டணி உருவாக்கப்பட திமுக ஒரு முக்கிய காரணமாக கருதப்பட்டது. அதோடு பல்வேறு மாநிலங்களில் இந்த கூட்டணியில் மோதல்கள் வெடித்த நிலையில், தமிழ்நாட்டில் இந்த கூட்டணி ஒற்றுமையாக இருந்து தொடர்ந்து பல்வேறு தேர்தல்களில் வெற்றிபெற்றது.

TVK into the INDIA bloc
நிறைவேறப்போகும் இந்தியாவின் கனவு.. களத்தில் குதித்த ரஷ்யா.. அசூர பலம் பெரும் இந்திய ராணுவம்!

அதே போல நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் திமுக தலைமையில் இந்த கூட்டணி போட்டியிட்ட நிலையில், இந்த கூட்டணி முதல் முறையாக தோல்வியை தழுவியது. அதனைத் தொடர்ந்து திமுக தலைமையிலான இந்த கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியதோடு, தவெக அரசின் அமைச்சரவையிலும் பங்கேற்றது.

கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிய நிலையில், திமுகவின் மூத்த தலைவர்கள் பகிரங்கமாகவே காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகின்றனர். இதனிடையே வரும் ஜூன் 8 அன்று டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என திமுக அறிவித்துள்ளது. தொடர்ந்து இது குறித்து பேசிய திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், இந்தியா கூட்டணியில் திமுக இல்லை என்றும் வெளிப்படையாகவே பேசினார்.

sanjay raut
sanjay raut

இந்நிலையில் இந்தியா கூட்டணியில் திமுகவுக்கு பதிலாக தவெக இடம்பெறும் என உத்தவ் தாக்கரேவின் சிவசேனா வரவேற்றுள்ளது.

இது குறித்து பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத், இந்தியா கூட்டணியில் திமுக விலகியிருக்க தொடங்கியுள்ளது. ஆனால், திமுகவுக்கு பதில் தவெக என்ற புதிய கட்சியை பெற்றுள்ளோம் என்றும் வேறு ஒரு கட்சி எங்கள் அணிக்கு கிடைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற சூழலில் இந்தியா கூட்டணியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

TVK into the INDIA bloc
முதல் நாளே அண்ணாமலைக்கு ஷாக்? களமிறங்கிய லதா ரஜினிகாந்த்.. ஒரேநாளில் உருவெடுத்த இயக்கங்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com