\
ஆந்திரா
ஆந்திராFacebook

ஆந்திரா|சாலையில் தொங்கிய மின்கம்பி! பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

ஆந்திர மாநிலம் கடப்பாவில் தாழ்வாக சென்ற மின்வயர் அப்பாவி சிறுவனின் உயிரை பறித்துள்ளது.
Published on: 

ஆந்திர மாநிலம் கடப்பாவில் தாழ்வாக சென்ற மின்வயர் அப்பாவி சிறுவனின் உயிரை பறித்துள்ளது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் கல் மனதையும் கலங்க வைப்பதாக உள்ளன. 8 மற்றும் 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அந்த 2 சிறுவர்கள், மிதிவண்டியில் மகிழ்ச்சியாக பேசியபடி வருகின்றனர். அப்போது குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தாழ்வாக சென்ற மின்வயரை கடந்து செல்ல முயன்றபோதுதான் அந்த கொடூரம் நிகழ்ந்தது. எதிர்பாராத விதமாக மின்வயர் சிறுவர்கள் மீது உரச, மிதிவண்டியுடன் இருவரும் நிலைகுலைந்து கீழே விழுகின்றனர்.

ஆந்திரா
இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் நாளை வாக்கு எண்ணிக்கை வரை!

அதனை பார்த்து அக்கம்பக்கத்தினர் சுதாரிப்பதற்குள், மிதிவண்டியில் தீப்பிடித்து, சிறுவர்கள் மீதும் பரவியது. போராடி தீயை அணைத்த மக்கள், சிறுவர்களை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு ஒரு சிறுவன் உயிரிழக்க, மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்து கொண்டிருந்த அப்பாவி சிறுவனின் உயிரை யாரோ ஒருவரின் அலட்சியத்தால் தாழ்வாக சென்ற மின்வயர் பறித்துள்ளது. மற்றொரு சிறுவனின் நிலை என்னவென்று உறுதியாக தெரியாமல் பெற்றோர் கலங்கி நிற்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com