58 தொகுதிகளில் தொடங்கியது 6ம் கட்ட மக்களவைதேர்தல்! வாட்டி வதைக்கும் வெயில் வாக்குப்பதிவை பாதிக்குமா?

தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகள் உட்பட மொத்தம் 58 மக்களவை தொகுதிகளில் இன்று காலை 7 மணி அளவில் ஆறாம் கட்ட மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
ஆறாம் கட்ட மக்களவை தேர்தல்
ஆறாம் கட்ட மக்களவை தேர்தல்முகநூல்

தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகள் உட்பட மொத்தம் 58 மக்களவை தொகுதிகளில் இன்று காலை 7 மணி அளவில் ஆறாம் கட்ட மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

மக்களவைத் தேர்தலில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகள், ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள பத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பீகார் மாநிலத்தில் உள்ள 8 தொகுதிகள், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 4 தொகுதிகள், ஒடிசாவில் உள்ள 6 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தின் 8 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வெப்பத்திலிருந்து வாக்காளர்களை காக்க வாக்குச்சாவடியில் குடிநீர் நிழற்பந்தல் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளனர்.

ஆறாம் கட்ட மக்களவை தேர்தல்
காலை தலைப்புச் செய்திகள்|6-ம் கட்ட மக்களவை தேர்தல் To RR-ஐ வீழ்த்தி இறுதிப்போட்டியில் SRH அணி!

மேலும், மூன்றாம் கட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட அனந்த்நாக்-ரஜோரி தொகுதிக்கான வாக்குப்பதிவும் இந்த ஆறாம் கட்டத்தில் நடத்தப்படுகிறது. ஒடிசா மாநிலம் சம்பல்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தி, அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, ஹரியானாவின் கர்னால் தொகுதியில் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களம்காண்கின்றனர்.

மனோஜ் திவாரி, கன்னையா குமார், சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சரி ஸ்வராஜ், திபேந்திர சிங் ஹூடா உள்ளிட்ட 900 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மக்களவை தேர்தல் மட்டும் அல்லாது, ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கான 42 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com