காலை தலைப்புச் செய்திகள்|6-ம் கட்ட மக்களவை தேர்தல் To RR-ஐ வீழ்த்தி இறுதிப்போட்டியில் SRH அணி!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இன்று நடக்கிறது ஆறாம் கட்ட மக்களவை தேர்தல் முதல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹைதராபாத் அணி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
  • மக்களவைத் தேர்தலில் ஆறாம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முக்கிய வேட்பாளர்களாக மேனகா காந்தி, மெகபூபா முப்தி, மனோகர்லால் கட்டார் ஆகியோர் களம்காணுகிறார்கள்.

  • முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.மேலும், புதிய அணை கட்ட முன்மொழிந்த கருத்துருவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது எனவும் வலியுறுத்தல்.

  • சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கேரள அரசிற்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்றிரவு புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  • காக்களூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து சட்டவிரோதமாக கூடுதல் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை தொடர்ந்து ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  • தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை 3 மாதங்களில் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • சென்னை வேளச்சேரியில், வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது,இந்நிலையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகிவுள்ளது.

  • திண்டுக்கல் அருகே மதுபான பாரில் முறைத்துப் பார்த்ததால் தகராறு ஏற்பட்டதில், தேவையின்றி பார்த்த நபரை சரமாரியாக தாக்கியது கும்பல்.

  • பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.இதில், மலையின் பக்கவாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் பதைபதைக்கவைக்கும் காட்சிகள்.

  • ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹைதராபாத் அணி. தகுதிச்சுற்று போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து நடையை கட்டியது ராஜஸ்தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com