\
6 Indian Tourists Stranded in Nepal; Helicopter Rescue Underway
கோப்புபடம்PTI

நேபாள பனிப்பொழிவு.. மலைப்பகுதியில் சிக்கிய 6 இந்தியர்கள்.. ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணி!

நேபாளத்தில் கனமழை, பனிப்பொழிவு காரணமாக மலைப்பகுதியில் சிக்கித் தவித்த 6 இந்திய சுற்றுலாப் பயணிகளை மீட்க, அந்நாட்டு ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
Published on: 

நேபாளத்தின் டோல்பா (Dolpa) மாவட்டத்தில் அமைந்துள்ள ஷே-போக்சுண்டோ தேசியப் பூங்காவில், அந்நாட்டின் மிக ஆழமான ஏரிகளில் ஒன்றான ஷே-போக்சுண்டோ ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியைக் காண்பதற்காக, 2 பெண்கள் உட்பட இந்தியாவைச் சேர்ந்த 6 சுற்றுலாப் பயணிகள், கடுமையான பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்ற வானிலை எச்சரிக்கையையும் மீறி அப்பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் முதல் அப்பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், மலைப்பாதைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏரியைப் பார்வையிடச் சென்ற 6 இந்திய சுற்றுலாப் பயணிகளும் அப்பகுதியில் சிக்கியுள்ளனர்.

கோப்புபடம்
கோப்புபடம்Reuters

அவர்களின் தகவல் தொடர்பு நேற்று இரவு முதல் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் சிக்கியிருக்கும் பகுதியை கண்டறிந்துள்ளதாகவும் போல்பா மாவட்ட ஆட்சியர் ஜூனு தாகல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களை மீட்பதற்காக நேபாள ராணுவத்தின் ஹெலிகாப்டர் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும், விரைவில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரி, சுமார் 145 மீட்டர் ஆழம் கொண்டது. கடுமையான பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் சவால்கள் நீடிக்கும் நிலையில், 6 இந்திய சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

6 Indian Tourists Stranded in Nepal; Helicopter Rescue Underway
’முரசு’ புயல் இன்று உருவாக வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கணிப்பு!!