இமாச்சல்: பாய்ந்தது கட்சித்தாவல் தடைச்சட்டம்... காங்கிரஸ் MLA-க்கள் 6 பேர் தகுதி நீக்கம்!

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இமாச்சல் சட்டப்பேரவை
இமாச்சல் சட்டப்பேரவைpt web

இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டமன்ற தொகுதிகளில் 40 இடங்களை வென்று காங்கிரஸ் தற்போது ஆட்சி அமைத்துள்ளது. இருப்பினும் அம்மாநில காங்கிரஸில் கடந்த சில மாதங்களாகவே, உட்கட்சி பூசல் நடந்து வருகிறது.

இமாச்சல் பிரதேசத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் 6 காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியான 25 தொகுதியை கொண்ட பாஜவிற்கு தங்களது வாக்குகளை செலுத்தினர். மேலும் சுயேட்சை உறுப்பினர்களும் பாஜகவிற்கு வாக்களித்தனர்.

இதனால் பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஹர்ஷ் மகாஜன் மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். 40 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்து, 25 வேட்பாளர்களை கொண்ட பாஜக வேட்பாளர் வெற்றியடைந்தது காங்கிரஸின் உட்கட்சி பூசலை வெளிச்சம்போட்டுக்காட்டியது.

இதையடுத்து வாக்குபதிவுக்கு பிறகு 6 சட்டமன்ற உறுப்பினர்களும், பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்திற்கு மாநிலத்தின் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கான்வாய் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு குற்றம் சாட்டியிருந்தார்.

ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்ற சூழலில், பாஜக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டமன்றத்தில் முன்வைத்தனர். இந்நிலையில் சபாநாயகர் அறையில் கோஷம் எழுப்பியதற்காக எதிர்க்கட்சித்தலைவர் உள்பட 15 பாஜக எம்.எல்.ஏக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். ஆட்சியை காப்பாற்றி கொள்ள காங்கிரஸ் தரப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஆறு எம்.எல்.ஏக்கள் போக இன்னுமொருவர் பாஜக-விற்கு தேவை என தகவல் பரவிய நிலையில், இம்மாச்சல பிரதேசத்தில் அமைச்சராக இருந்த காங்கிரஸை சேர்ந்த விக்ரமாதித்யா தீடீர் ராஜினாமா செய்தார். இவரும் விரைவில் அசாம் மாநில முதல்வர் ஹேமந்த் பிஸ்வாஸ் முன்னிலையில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சபாநாயகர் குல்தீப் சிங்
சபாநாயகர் குல்தீப் சிங்

இந்நிலையில் அம்மாநிலத்தின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சவுகான், கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அந்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பாஜகவிற்கு வாக்களித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வியாழன் அன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சட்டசபை சபாநாயகர் தெரிவித்துள்ளார். கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் விதிகள் எம்.எல்.ஏக்களுக்கும் பொருந்தும் என சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஹரியானாவில் நேற்று முன்தினம் இரவு தங்கியிருந்த அந்த 6 எம்.எல்.ஏக்களும் நேற்று மாநில சட்டசபைக்கு வந்தபோது, பாஜக அவர்களை கைதட்டி வரவேற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com