4ஆம் கட்ட தேர்தல்: ஆந்திரா சித்தூரில் வாக்கு இயந்திரங்கள் அடித்து உடைப்பு

ஆந்திராவில் வாக்கு இயந்திரங்கள் அடித்து உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மோதல் ஏற்பட்ட பகுதியில் உடைக்கப்பட்ட கார் கண்ணாடி
மோதல் ஏற்பட்ட பகுதியில் உடைக்கப்பட்ட கார் கண்ணாடிpt web

மக்களவைத் தேர்தலில் நான்காம் கட்டமாக, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் 9 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசத்தில் 13, மகாராஷ்டிராவில் 11, மத்திய பிரதேசம், மேற்குவங்கத்தில் தலா 8 தொகுதிகள், பீகாரில் 5, ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவில் தலா 4 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், சித்தூர் கடப்பா உட்பட 4 மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரிடையே சில இடங்களில் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக சித்தூர் மாவட்டம் பலநாடு எனும் வாக்குச்சாவடியில் இரு கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வாக்கு இயந்திரங்கள் உடைக்கப்பட்டன. அதேபோல் மற்ற இடங்களிலும் சில வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல் வந்துள்ளன.

மோதல் ஏற்பட்ட பகுதியில் உடைக்கப்பட்ட கார் கண்ணாடி
துருவ் ரத்தி வீடியோவை பகிர்ந்த விவகாரம்... கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை!

அதேபோல் கடப்பா அனந்தபூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் கார் கண்ணாடி உடைப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வாக்குச்சாவடிக்கு அருகிலேயே பரப்புரை செய்கிறார்கள் என்பன போன்ற சில காரணங்களுக்காக இருதரப்புக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது.

இரு கட்சிகளும் பிரதானமான கட்சியாக இருக்கும் சூழலில், இரு கட்சிகளுக்கும் இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. காவல்துறையினரும் ஆங்காங்கு அதிகளவில் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து மாநில தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த புகார்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com