\
Fire accident
Fire accidentpt desk

சேலம்: இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையில் கவிழ்ந்த பேருந்து - தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சங்ககிரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Published on

செய்தியாளர்: மோகன்ராஜ்

சென்னையில் இருந்து கோவைக்கு தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சாலையை கடக்க முன்றதாக தெரிகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையில் கவிழ்ந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து பேருந்திலிருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் அவசர அவசரமாக வெளியேறினர். அடுத்த சிறிது நேரத்தில் பேருந்து கொளுந்துவிட்டு எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Fire accident
Fire accidentpt desk

இதனிடையே பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த பெரியசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த சங்ககிரி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Fire accident
48 மணி நேரத்தில்.. வளிமண்டல சுழற்சி.. புயல் உருவாக வாய்ப்பா? - வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்!

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com