பஞ்சாப்பில் நிலநடுக்கம் - ரிக்டரில் 4.1 ஆக பதிவு

பஞ்சாப்பில் நிலநடுக்கம் - ரிக்டரில் 4.1 ஆக பதிவு
பஞ்சாப்பில் நிலநடுக்கம் - ரிக்டரில் 4.1 ஆக பதிவு

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தரசஸ் அருகே இன்று அதிகாலை 3.42 மணியளவில் (நவ.14) லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 4.1ஆக பதிவாகியுள்ளது. 120 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை அன்று நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இந்தியாவில் டெல்லி, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதையும் படிக்க: நடுவானில் மோதிய போர் காலத்து விமானங்கள்.. துண்டுத்துண்டாக வெடித்து சிதறிய பகீர் காட்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com