\
World Lung Cancer day
World Lung Cancer dayPT

புகைப்பிடிப்பவர்களில் 37% பேருக்கு COPD பாதிப்பு.. அதிர்ச்சி தரும் ஆய்வு!

புகைப்பிடிப்பால் ஏற்படும் சுவாசக் கோளாறுகள்: ஆரம்பகால பரிசோதனை முக்கியம்!
Published on: 
Summary

புகைப்பிடிப்பவர்களில் 37% பேருக்கு சிஓபிடி பாதிப்பு இருப்பது இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. நுரையீரல் செயல்பாட்டை பெருமளவு பாதிக்கும் இந்நோயை ஆரம்பகால பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, புகைப்பழக்கத்தை விடுவதற்கான சிகிச்சைகள் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

புகைப் பழக்கத்தைக் கைவிட முடியாமல் தவிக்கும் கோடிக்கணக்கானோருக்கு வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது என்றும், ஆரம்பகாலப் பரிசோதனையும், அறிவியல் ரீதியான தொடர் சிகிச்சையும் அவசியம் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இது குறித்த விரிவான செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

சுவாசக் கோளாறுகளுக்குப் புகைப்பிடித்தல் முக்கியக் காரணமாக உள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுப்படி, சிஓபிடி Chronic obstructive pulmonary disease (COPD) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தொடர்பான 10 மரணங்களில் 8 மரணங்கள் புகைப்பிடிப்பதாலேயே நிகழ்கின்றன.

smoking
smoking reuters

இந்தியாவில் 27 ஆயிரத்து 319 பேரிடம் நடத்தப்பட்ட 23 ஆய்வுகளின் தொகுப்பில், புகைப்பிடிப்பவர்களில் 37 சதவீதம் பேருக்கு சிஓபிடி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் நுரையீரலுக்குச் செல்லும் காற்றோட்டம் தடுக்கப்படுகிறது. இதன் விளைவாக மூச்சுத் திணறல், தொடர் இருமல், சளி மற்றும் உடல் சோர்வு ஏற்படுத்துகிறது. நுரையீரல் செயல்பாடு பெருமளவு பாதிக்கும் வரை இந்நோய் கண்டறியப்படுவதில்லை.

இருமல் மற்றும் மூச்சுத் திணறலை வயோதிகம் அல்லது புகைப்பழக்கத்தின் சாதாரண விளைவு என அலட்சியப்படுத்தக் கூடாது என்கிறார் டெல்லி பிஎல்கே-மேக்ஸ் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் பவன் குப்தா. ஸ்பைரோமெட்ரி போன்ற ஆரம்பகாலப் பரிசோதனைகளும், புகைப்பழக்கத்தைக் கைவிடுவதற்கான சிகிச்சைகளும் மிக அவசியம் என கூறுகிறார்.

cigerettes
cigerettesreuters

நிக்கோட்டின் அடிமைத்தனத்தால் பலரால் ஒரே முயற்சியில் புகைப் பழக்கத்தை விட முடிவதில்லை. எனவே, ஆலோசனை மற்றும் நடத்தை ரீதியான ஆதரவு தேவைப்படுகிறது. ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில், புகைப் பழக்கத்தை முற்றிலுமாக விட முடியாதவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான மாற்று வழிகளைக் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

இந்தியாவிலும் இதனை அமல்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். அதேசமயம், புகைப்பிடிப்பதால் மட்டுமே சிஓபிடி ஏற்படுவதில்லை. வீட்டுப் புகை, தொழிற்சாலை தூசு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடும் இதற்குக் காரணமாகின்றன. சிஓபிடி நோயைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைத் தாண்டி, ஆரம்பகால நோயறிதல், தரமான சுவாச சிகிச்சை மற்றும் புகைப்பழக்க மீட்புத் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.

World Lung Cancer day
காப்பி குடிப்பதால் இத்தனை நன்மைகளா? ஆய்வில் வெளியான புதிய தகவல்