\
coffee
coffee reuters

காப்பி குடிப்பதால் இத்தனை நன்மைகளா? ஆய்வில் வெளியான புதிய தகவல்

காபி குடிப்பதால் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கின்றன: ஆய்வில் தகவல்
Published on: 
Summary

டென்மார்க் ஆராய்ச்சியில், அடிக்கடி காபி குடிப்பவர்களின் குடலில் நல்ல நுண்ணுயிரிகள் அதிகரிப்பதுடன், செரிமான மண்டல செயல்பாடுகள் மேம்படும் என கண்டறியப்பட்டுள்ளது. இது மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் - M.மீரா

அடிக்கடி காபி குடிப்பவர்களின் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வகைகள் அதிகமாக இருப்பதாக டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், காபி குடிப்பது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வு, காப்பி குடிப்பது மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வு Gut Microbiology என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

coffee
coffeereuters

இந்த ஆய்வில் டென்மார்க்கைச் சேர்ந்த ஆரோக்கியமான 61 பேர் பங்கேற்றனர். அவர்களிடம் 8 நாட்களுக்கு உணவு மற்றும் பானங்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில் 50 பேர் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் சிறிய மின்னணு கருவியையும் விழுங்கினர்.

இந்தக் கருவி உணவு செரிமான மண்டலத்தில் பயணிக்கும் நேரம், குடலின் வெப்பநிலை, அமிலத்தன்மை மற்றும் குடல் தசைகளின் இயக்கம் உள்ளிட்டவற்றைப் பதிவு செய்தது.

இதில், வாரத்தில் அதிக நாட்கள் தினமும் 1 முதல் 5 கப் வரை காபி குடிப்பவர்களும், குறைவாகக் காபி குடிப்பவர்களும் ஒப்பிடப்பட்டனர்.

coffee
coffeereuters

இதில், அடிக்கடி காபி குடிப்பவர்களின் குடலில் பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் இருப்பது தெரியவந்தது. மேலும், இவர்களின் சிறுகுடலில் அமிலத்தன்மை குறைவாகவும், பெருங்குடலில் சுருக்கங்கள் அதிகமாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.

குடலில் ஏற்படும் இந்தச் சுருக்கங்கள் உணவு செரிமானத்திற்கு உதவுவதுடன், மலச்சிக்கலைத் தடுக்கவும் குடல் தசைகள் சீராகச் செயல்படவும் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், குடலில் ஏற்படும் அமிலத்தன்மை மாற்றம் உடலுக்கு நன்மையா அல்லது தீமையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

காபி குடிப்பதற்கும் குடல் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

coffee
சாதா முட்டை X பிரீமியம் முட்டை: எதில் சத்து? உண்மை என்ன?