IT சோதனை.. காங். எம்.பி தொடர்புடைய இடங்களில் சிக்கிய ரூ.351 கோடி! 5 நாட்களாக எண்ணிய 80 ஊழியர்கள்!

காங்கிரஸ் எம்பி குடும்பத்தினர் தொடர்புள்ள இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றிய பணத்தை 5 நாட்களாக எண்ணி முடித்துள்ள நிலையில் அதன் மதிப்பு 351 கோடி ரூபாய் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வருமான வரி சோதனை
வருமான வரி சோதனைமுகநூல்

காங்கிரஸ் எம்பி குடும்பத்தினர் தொடர்புள்ள இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றிய பணத்தை 5 நாட்களாக எண்ணி முடித்துள்ள நிலையில் அதன் மதிப்பு 351 கோடி ரூபாய் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி தீரஜ் பிரசாத் சாகுவின் குடும்பத்தினர் தொடர்புள்ள இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 6 ஆம் தேதி முதல் சோதனை மேற்கொண்டனர். ஒடிசாவில் உள்ள மதுபான ஆலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில் 10 பீரோக்களில் 500 ரூபாய் தாள்கள் கட்டுக்கட்டாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக எண்ணி வந்தனர். இந்த பணியில் வருமான வரித்துறையினர், 3 வங்கிகளின் ஊழியர்கள் என மொத்தம் 80 பேர் பங்கேற்றனர். இது தவிர தானியங்கி பணம் எண்ணும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. விடியவிடிய 3 ஷிஃப்டுகளாக இயங்கி தற்போது முழு பணமும் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்ட தொகையின் மதிப்பு 351 கோடி ரூபாய் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பிட்ட நபர் மற்றும் குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இவ்வளவு பெரிய தொகை கைப்பற்றப்படுவது இதுவே முதன்முறை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் இவ்விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமைாக சாடியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “ காங்கிரஸ் எம்பியிடம் இருந்து பெரிய தொகை கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் எதுவும் பேசாமல் அமைதி காப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “இவ்விவகாரத்தில் கட்சி சார்பில் எதுவும் கூற முடியாது. இது அந்த எம்பியின் தனிப்பட்ட வணிகம் தொடர்பான பிரச்னை .

வருமான வரி சோதனை
அரசியல் வாரிசை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி!

காங்கிரஸ் கட்சி தலைவர்களை மட்டும் மத்திய அரசு குறி வைக்கிறது. பாஜக தலைவர்களிடம் சோதனை நடத்தப்படாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். இவ்விவகாரம் குறித்து எக்ஸ் சமூக தளத்தில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் அவர்களுக்கே திரும்பத் தரப்படும் என கூறியிருந்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com