ஒரே நாடு ஒரே தேர்தல்
ஒரே நாடு ஒரே தேர்தல்கோப்புப்படம்

ஒரே நாடு ஒரே தேர்தல்: மூன்று சட்டங்களை கொண்டு வருவதற்கு திட்டமிடுகிறதா மத்திய அரசு?

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு மூன்று சட்டங்களை கொண்டுவருவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு மூன்று சட்டங்களை கொண்டுவருவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் இரண்டு சட்டங்கள் அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக இருக்கும்.

1) முதலாவது சட்டம் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு அரசமைப்பு திருத்த சட்டமாக இருக்கும்.

2) இரண்டாவதாக, உள்ளாட்சித் தேர்தல்களை மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் இணைத்து நடத்துவதற்கு வசதி செய்யும் அரசமைப்பு திருத்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிகிறது. இதற்கு 50 விழுக்காடு மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும்.

3) மூன்றாவதாக புதுச்சேரி, டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கான பதவிக் காலத்தை மற்ற சட்டப்பேரவை பதவிக்காலத்துடன் ஒத்திருக்கும்படி மாற்ற ஒரு சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்
கர்நாடகா | கட்டுக்கட்டாக பணத்தைத் திருடும் பூசாரிகள்.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

அண்மையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு அளித்த பரிந்துரையில் அரசமைப்பு சட்டத்தின் 3 பிரிவுகளில் மற்றும் 12 உப பிரிவுகளில் திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. அதே போல், சட்டப்பேரவைகள் உள்ள யூனியன் பிரதேசங்கள் குறித்த சட்டங்களிலும் திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

ஒரே நாடு; ஒரே தேர்தல்
ஒரே நாடு; ஒரே தேர்தல்முகநூல்

கடந்த மார்ச் மாதம் அளித்த அறிக்கையில் ஒரே நாடு ஒரே தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த பரிந்துரைக்கப்பட்டது. முதல் கட்டத்தில் மக்களவை சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் அதன் பின்னர் 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com