பணத்தை திருடும் பூசாரிகள்
பணத்தை திருடும் பூசாரிகள்pt web

கர்நாடகா | கட்டுக்கட்டாக பணத்தைத் திருடும் பூசாரிகள்.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

கர்நாடகாவின் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோயிலின் உண்டியல் பணத்தை பூசாரிகள் கட்டுக் கட்டாகத் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மைசூர் சாலையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி செல்கின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் பணம் கோயில் நலப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த காணிக்கை பணத்தை கோயில் பூசாரிகள் மற்றும் டிரஸ்டிகள் இணைந்து 500 ரூபாய் கட்டுகளைத் திருடும் காட்சிகள் கண்காணிப்பு கேமரா வழி தெரியவந்துள்ளது. திருட்டில் ஈடுபட்ட ஹனுமந்தப்பா, கோபிநாத், ஸ்ரீனிவாஸ், அசோக் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்குக் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com