பூங்காவில் எரித்து கொல்லப்பட்ட இளம்பெண்! திருமணம் செய்ய கோரியதால் ஆண் நண்பர் செய்த கொடூரச் செயல்!

சண்டிகரில் 27 வயது பெண் ஒருவர் பூங்காவில் வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண்ணுடன் சென்ற ஆண் நண்பர் மீது சந்தேகத்தின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
சண்டிகர்
சண்டிகர்முகநூல்

சண்டிகரில் 27 வயது பெண் ஒருவர், பூங்காவில் வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெண்ணுடன் சென்ற ஆண் நண்பர் மீது சந்தேகத்தின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

சண்டிகரில், 27 வயது நிரம்பிய பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் பொது பூங்கா ஒன்றிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணுடன் வந்த ஆண் நண்பராலேயே அவர் தீ வைத்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவதினத்தன்று, இரவு 11 மணி அளவில் இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படும் நிலையில், அருகில் இருந்த GMSH அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இப்பெண் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், உடனடியாக சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனைக்கு எடுத்து செல்ல மருத்துவர்கள் பரித்துரை செய்துள்ளனர்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அப்பெண்னின் கை, கால், மார்பு என உடலில் 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், சிகிச்சை பலனின்றி செவ்வாய் கிழமை அதிகாலை அப்பெண் உயிரிழந்துள்ளார்.

போலீஸ் தரப்பில் இது குறித்து தகவல் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்டு உயிரிழந்தப் பெண் மொஹாலியில் உள்ள சோஹானா பகுதியைச் சேர்ந்த ராணி என்பது தெரியவந்தது. ராணி மற்றும் இவரின் ஆண் நண்பர் விஷாலும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ராணி கேட்டுள்ளார். ஆனால், விஷால் இதற்கு தயக்கம் காட்டியுள்ளார். இந்நிலையில், பூங்காவில் வைத்து அப்பெண்னை விஷால் எரித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சண்டிகர்
மதுரை | கோவில் சென்றுவிட்டு திரும்பியபோது நேர்ந்த கொடூரம்; குழந்தை உட்பட ஐவர் உயிரிழப்பு #Video

இதனையடுத்து, செக்டார் 36 காவல்நிலையத்தில் விஷால் மீது சந்தேகத்தின் பேரில் கொலை குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பவ இடத்தில் எரியக்கூடிய திரவம், பாதிக்கப்பட்டவரின், ஆடை, காலணிகள், ஒரு ஸ்ரே பாட்டில் ஆகியவை கண்டுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com