ஜம்மு-காஷ்மீர்புதிய தலைமுறை
இந்தியா
ஜம்மு-காஷ்மீர் | பேருந்து கவிழ்ந்து விபத்து - 22 பேர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் ராய்சி மாவட்டம் ஷிவ்கோரி கோயிலுக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அக்னூர் அருகே பேருந்து சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 22 பயணிகள் உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற மீட்புப் படைவீரர்கள், படுகாயம் அடைந்த 40 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், பேருந்தில் பயணம் செய்தவர்கள் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேசம் | தந்தை, தம்பியை கொலை செய்த சிறுமி.. ஃபிரிட்ஜில் உடல்கள்.. காதலால் நேர்ந்த கொடுமை!