உயர்நீதிமன்ற நீதிபதிகள்
உயர்நீதிமன்ற நீதிபதிகள்முகநூல்

நாடு முழுவதும்.. 21 உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாற்றம்!

நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் 21 பேரை பணியிட மாற்றம் செய்ய, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
Published on

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கடந்த 13ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில் மூத்த நீதிபதிகளில் ஒருவரான அபய் ஓகாவும் ஓய்வு பெற்றார். இதை அடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 இல் இருந்து 31 ஆக குறைந்தது.

தொடர்ந்து உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் பதவியேற்ற நிலையில் திங்கட்கிழமை உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூடியது. தொடர்ந்து மூன்று மாநில உயர் நீதிமன்றங்களில் இருந்து மூன்று நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதன்படி கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஞ்சார்யா, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய்பிஷ்னு, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துருகர் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் 21 பேரை பணியிட மாற்றம் செய்ய, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற கொலீஜியம் இந்தியாவின் தலைமை நீதிபதி தலைமையில் செயல்படுகிறது. இந்த கொலீஜியம் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்கிறது. நீதிபதிகளின் பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் பிற நிர்வாக முடிவுகளை எடுக்கிறது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள்
வருமான வரி கட்டணுமா? கவலை வேண்டாம்.. அவகாசம் நீட்டிப்பு!

அதன்படி, தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 21 நீதிபதிகளை பணியிடம் மாற்ற, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி விவேக் குமார் சிங்கை மத்திய பிரதேசத்துக்கு மாற்றவும், நீதிபதி பட்டு தேவானந்தை ஆந்திர உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக குறைந்துவிடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com