மீண்டும் பாலியல் புகார்.. 2 பெண்கள் குற்றச்சாட்டு.. பாடகர் வேடன் மீது வழக்குப்பதிவு!
கேரள ராப் பாடகர் வேடன் மீதான பாலியல் புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வேடன், தனது ராப் பாடல்களால் அடித்தட்டு மக்களின் ஆதரவை பெற்றவர். ஆனால், தொடர்ச்சியான பாலியல் புகார்கள் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேற்றுமை, அடக்குமுறைகளுக்கு எதிராக தனது ராப் இசை பாடல்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் கேரளாவைச் சேர்ந்தபாடகர் வேடன். அவரது பாடல் வரிகளில் இருக்கும் வார்த்தைகள், அடித்தட்டு மக்களையும், அவர்களின் வலிகளையும் பறை சாற்றும் வகையில் அமைந்திருப்பதால், பலருக்கும் பாடகர் வேடனுக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் தேச ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கு எதிராக அவர் செயல்படுவதாகவும் மற்றொரு தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இப்படியான நிலையில், பாடகர் வேடன்மீது இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர். இரண்டு பெண்களுமே பாடகர் வேடன் தங்களை பயன்படுத்திக் கொண்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக பாடகர் வேடன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாடகர் வேடன், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் மருத்துவர் ஒருவர்புகார் அளித்திருந்தார். தொடர்ச்சியாக பாடகர் வேடன் பாலியல் புகார்களைச் சந்தித்து வருவது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மலையாள திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது