லக்னோ: நாட்டை உலுக்கும் சம்பவம்... நரபலி கொடுக்கப்பட்ட சகோதரர்கள்... இரு பெண்கள் கைது!

லக்னோ முசாபர்நகரில் இரண்டு குழந்தைகளை நரபலிக்காக அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நரபலி
நரபலிgoogle

21ம் நூற்றாண்டில் நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னமும் சிலர் மூடநம்பிக்கையின் காரணமாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நரபலி என்ற கொடூரமும் இன்னமும் ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பது இன்னும் கொடுமை. அப்படி சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தின் லக்னோ முசாபர்நகரில் இரண்டு குழந்தைகளை நரபலிக்காக அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

லக்னோவின் முசாபர் நகரைச் சேர்ந்தவர் தேஜ்பால். இவருக்கு சீமா என்ற மனைவியும், கேசவ் (7) - லக்கி (4) என்ற இரு மகன்களும் இருக்கின்றனர். தேஜ்பாலின் சகோதரர் ஹரிஷ் அவரது மனைவி அங்கிதா ஆகியோர் அருகிலேயே கட்டௌலி என்ற கிராமத்தில் வசித்து வந்தனர்.

கொலை
கொலை புதிய தலைமுறை

இவர்களில், அங்கிதா மனநிலை பிறழ்ந்தவராக இருந்துள்ளார். இதற்கு காரணம் அங்கிதாவின் உடன்பிறந்த சகோதரியின் ஆத்மா என்று அங்கிதாவின் தாயார் ரீனா கூறிவந்துள்ளார். இதையடுத்து அங்கிதாவின் உடலிலிருந்த ஆத்மாவை வெளியேற்றுவதற்காக, அங்கிதாவும், அவரது தாயாரும் உள்ளூர் பேய் ஓட்டும் ஒரு மந்திரவாதியை சந்தித்துள்ளனர். மந்திரவாதியும், “அங்கிதாவின் உடலில் இருக்கும் ஆத்மா வெளியேற வேண்டுமென்றால் இருகுழந்தைகளை நரபலி கொடுக்கவேண்டும்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

நரபலி
காரை ஓட்டியது மகன் இல்லையாம்.. குண்டை தூக்கிப்போட்ட தொழிலதிபர்! புனே விபத்தில் அதிர்ச்சி தகவல்கள்!

மந்திரவாதியின் வாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்ட அங்கிதாவும் அவரது தாயாரும் திட்டம் ஒன்றை போட்டனர். அதன்படி, தேஜ்பால் - சீமா தம்பதியின் இரண்டாவது மகனான லக்கி என்ற சிறுவனை கடந்த ஏப்ரல் மாதம் 4 ம் தேதி நரபலி கொடுத்துள்ளனர். இதற்கு சிறுவனின் தாய் தந்தையும் உதவியாக இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சிறுவன் இறந்த செய்தி அப்பகுதி காவல் நிலையத்தை எட்டியுள்ளது.

கொலை
கொலைPT

போலீஸார், பெற்றோரை முதலில் விசாரித்து உள்ளனர். இருவரும், சிறுவனின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்ததாக கூறியதால், போலீஸாருக்கு சந்தேகம் ஏதும் ஏற்படாமல் இருந்துள்ளது. அதனால் இது இயற்கையான மரணம் என்ற கோணத்தில் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் சென்றுள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம், அடுத்த நரபலியாக தேஜ்பால் , சீமாவின் மூத்த மகனான கேசவ் என்ற சிறுவன் கொல்லப்பட்டுள்ளார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

நரபலி
போக்சோ வழக்குகளில் உ.பி முதலிடம்.. தமிழ்நாட்டிற்கு எந்த இடம்? மத்திய அரசு கொடுத்த விவரம்!

அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட சமயம், ‘அப் ஜாகர் ஆத்மா கோ சாந்தி மிலி’ (இப்போது என் ஆன்மா சாந்தியடைகிறது) என்று எழுதியிருந்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. இதை எழுதியது யார் என்ற கோணத்தில், கையெழுத்து பிரதிகளை சரிபார்த்த போலீஸாருக்கு அதிர்ச்சி தகவலொன்று கிடைத்துள்ளது. அதன்படி அது அங்கிதாவின் கையெழுத்து என்பதை அவர்கள் தெரிந்துக் கொண்டுள்ளனர்.

கொலை
கொலைfile image

போலீஸார் விசாரணையில் அங்கிதா மற்றும் அவரது தாயார் ரீனாதான் இக்கொலைகளுக்கு காரணம் எனவும் தெரிந்துக்கொண்ட போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com