கவனம் தேவை | மாவு அரைத்தபோது கிரைண்டரில் சிக்கிய இளைஞர்... பரிதாபமாக உயிரிழந்த சோகம்!
நொடி பொழுதில் சிதறிய கவனத்தால் இப்படியெல்லாம் ஒரு மனிதனுக்கு இறப்பு வருமா? என்று சிந்திக்க முடியாத அளவுக்கு தினந்தோறும் பல்வேறு விபத்துகள் நம்மை சுற்றி அரங்கேறி வருகின்றன. அப்படித்தான் மும்பையில் நடந்தேறிய சம்பவமும்.
மும்பையின் வொர்லி ஆதர்ஷ் நகரில் ஒரு சீன உணவகம் இயங்கிவருகிறது. இங்கு ஜார்க்கண்டை சேர்ந்த 19 வயதான சூரஜ் நாராயண் யாதவ் என்ற இளைஞர் பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல, சனிக்கிழமை அன்று, மஞ்சூரியன் மற்றும் சைனீஸ் பெல் உணவை தயாரிப்பதற்காக மாவு அரைப்பதற்கு கிரைண்டரை இயக்கியுள்ளார்.
இதற்காக, தனது இடுப்பளவில் உள்ள கிரைண்டரில் மாவை எடுத்து விடுவதற்காக கையை விட்டு வேலை செய்து வந்துள்ளார் சூரஜ். அப்போது, திடீரென, சூரஜின் சட்டை கிரைண்டரின் உள்ளே மாட்டிக்கொள்ள சட்டென கிரைண்டருக்குள் இழுக்கப்பட்ட அவர், அடுத்த நொடியே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுத்தொடர்பான வீடியோக்கள் வெளியாகி காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த இந்த சம்பவம் போலீஸாரின் கவனத்திற்கு வந்துள்ள நிலையில், அங்குள்ள சிசிடிவி காட்சியில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.