சத்தீஸ்கர் | தேடுதல் வேட்டையில் 18 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் பீஜபூர் டண்டேவாடா எல்லையை ஒட்டி அமைந்துள்ள கங்கலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 18 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கடில் மாநிலத்தில் அண்மை காலமாக மாவோயிஸ்டர்களுக்கு எதிரான தேர்தல் வேட்டை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதலே பீஜப்பூர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.
மாவட்ட பாதுகாப்பு படையினர், கோப்ரா மற்றும் எஸ்டிஎப் படையினர் ஆகியோர் இணைந்து நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 18 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு படை வீரர்களின் தேடுதல் வேட்டை தொடர்ந்து வரும் நிலையில் உயிரிழந்த நக்சலைட்டுக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது