பொதுமருத்துவமனையில் 3 மாதங்களில் 179 குழந்தைகள் உயிரிழப்பு; மகாராஷ்டிரத்தில் தொடரும் அவலம்

மகாராஷ்டிரா நந்தூர்பார் பொது மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களில் 179 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
infant
infantpt web

மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்தின் பொது மருத்துவமனையில், தற்போதுவரை கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காரணங்களால் 179 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி , ஜூலையில் 75 குழந்தைகளும், ஆகஸ்ட் மாதத்தில் 86 குழந்தைகளும் மற்றும் செப்டம்பரில் 18 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இறப்புக்கான முக்கிய காரணங்கள் குறைந்த எடை, பிறப்பு மூச்சுத்திணறல், செப்சிஸ் மற்றும் சுவாச நோய்கள் என கூறப்படுகிறது

70% இறப்புகள் 0-28 நாட்கள் வயதுடைய குழந்தைகள் ஆகும். பல பெண்களுக்கு இங்கு அரிவாள் செல் இருப்பதால் பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று கூறும் மாவட்ட நிர்வாகம் விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com