\
Shivraj Raghunath Motegaonkar
Shivraj Raghunath Motegaonkar web

நீட் வினாத்தாள் கசிவு| விசாரணையில் சிக்கிய முக்கிய புள்ளி.. ஆசிரியர் to ரூ.1500 கோடி அதிபதி!

பகுதி நேர ஆசிரியராக தொடங்கி 1,500 கோடி பேரரசை கட்டிய பயிற்சி மைய அதிபரின் எழுச்சியும் வீழ்ச்சியும்.. முன்னொருநாள் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய நபரே, தற்போது அத்தேர்வின் வினாத்தாள் கசிவில் கைதாகியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Published on
Summary

2026 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், மகாராஷ்டிரா-ராஜஸ்தான் பயிற்சி மைய உரிமையாளர்கள், வேதியியல் பேராசிரியர் உட்பட 10 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21 அன்று மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. லத்தூரைச் சேர்ந்த ரேணுகாய் வேதியியல் மைய நிறுவனர் சிவராஜ் மோட்டேகாங்கர் மீது விசாரணை தீவிரமாகிறது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள 2026 நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி மைய உரிமையாளர்கள், வேதியியல் பேராசிரியர் உட்பட 10 பேரை சிபிஐ (CBI) அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

NEET paper leak
NEET paper leak web

கசிவு விவகாரம் காரணமாக, மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்ளில் மிக முக்கியமாக கவனம் பெறுபவர் மகாராஷ்டிர மாநிலம் லத்தூரைச் சேர்ந்த ரேணுகாய் வேதியியல் பயிற்சி மையத்தின் நிறுவனர் சிவராஜ் ரகுநாத் மோட்டேகாங்கர் ஆவார். இவரை சிபிஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.

சிவராஜ் மோட்டேகான்கர் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பகுதிநேர ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் என்று கூறப்படுகிறது. 1999-2000 காலகட்டத்தில், லத்தூரில் உள்ள ஒரு சிறிய கடையில், வெறும் 10 மாணவர்களைக் கொண்டு அவர் 'RCC Classes'-ஐத் தொடங்கினார்.

Shivraj Raghunath Motegaonkar
Shivraj Raghunath Motegaonkar web

காலப்போக்கில், இந்த நிறுவனம் மிக வேகமாக விரிவடைந்து. தற்போது லத்தூர், நாந்தேட், சத்ரபதி சம்பாஜிநகர், புனே, அகோலா, நாசிக் மற்றும் சோலாப்பூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இது செயல்பட்டு வருகிறது.

உள்ளூர் மதிப்பீடுகளின்படி, இந்தப் பயிற்சி நிறுவனத்தின் சொத்து மதிப்பு தற்போது சுமார் 1,500 கோடி ரூபாயாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும், 40,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிறுவனத்துடன் இணைந்து பயின்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Shivraj Raghunath Motegaonkar
அமைச்சரவையில் இடம் பெறாத 2 துறைகள்.. முதல்வருக்கு ஒதுக்கப்பட்ட புது பொறுப்பு.!

இந்​நிலை​யில் லத்​தூர் அருகே கோபே​கான் ஷிவார் பகு​தி​யில் 8 ஏக்​கர் நிலத்​தில் இவர் பள்​ளி, கல்​லூரி கட்டி வரு​வது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்​துள்​ளது.

Shivraj Raghunath Motegaonkar
Shivraj Raghunath Motegaonkar web

அந்த நிலத்​தில் இரண்​டரை ஏக்​கர் பரப்​பள​வில் பிரம்​மாண்ட பல அடுக்​குக் கட்​டிடம் உரு​வாகி வரு​வதும் அதன் கட்​டு​மானப் பணிகள் ஏறக்​குறைய நிறைவடை​யும் நிலை​யில் இருப்​பதும் வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. இது மோட்​டே​கான்​கரின் வரு​மான ஆதா​ரம் மற்​றும் நிதி ஆதா​ரங்​கள் குறித்த கேள்வி​களை எழுப்பியுள்​ளதால் இது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் NEET 2025 தேர்வில், இவரின் ரேணுகாய் வேதியியல் பயிற்சி மையத்தின், 19 மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள AIIMS நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இவர்களில், இரண்டு மாணவர்கள் AIIMS டெல்லிக்கும், ஐந்து மாணவர்கள் AIIMS ஹைதராபாத்திற்கும், தலா மூன்று மாணவர்கள் AIIMS போபால் மற்றும் AIIMS வாரணாசிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், AIIMS நாக்பூர், தியோகர், கோரக்பூர், ராஜ்கோட், ராய்பூர் மற்றும் மங்களகிரி ஆகிய நிறுவனங்களில் தலா ஒரு மாணவர் சேர்க்கை பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து தனிநபர் வழிகாட்டுதல் (one-on-one mentoring) திட்டங்கள் என்ற போர்வையில், மாணவர்களுக்குத் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து வழங்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Shivraj Raghunath Motegaonkar
ஹார்முஸ் நீரிணை | 24 மணி நேரத்தில் 26 கப்பல்கள் அனுமதி.. என்ன காரணம்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com