பெங்களூரு - பாதி எரிந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்ட 13 வயது சிறுவனின் உடல்
பெங்களூரு - பாதி எரிந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்ட 13 வயது சிறுவனின் உடல்முகநூல்

பெங்களூரு | பாதி எரிந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்ட 13 வயது சிறுவனின் உடல்! விசாரணையில் பகீர் தகவல்

பெங்களுரில் கடந்த புதன்கிழமை காணாமல் போனதாக கூறப்படும் 13 வயது சிறுவனின், உடல் பாதி எரிந்தநிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹுலிமாவு பகுதியை சேர்ந்த நிஷித் (13 வயது) என்ற சிறுவன். இவர் கிறிஸ்ட் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். அவரது தந்தை ஜே.சி. அச்சித், ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் , கடந்த புதன்கிழமை (30.8.2025) மாலை 5 மணிக்கு வழக்கம்போல டியூஷனுக்கு சென்று கொண்டிருந்தார் நிஷித் . ஆனால், 7.30 மணி ஆகியும் நிமிஷ் விடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், சிறுவனின் தந்தை ஜே.சி. அச்சித், உடனடியாக இதுகுறித்து காவல்துறையிடத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்த புகாரில், அவரது மகன் இரவு 7.30 மணி வரை வீடு திரும்பவில்லை என்றும் சிறுவனின் தாய் ஆசிரியரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஏற்கெனவே அவர் சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தேடு வேட்டை நடத்தப்பட்டநிலையில், அரேகெரே 80 அடி சாலையில் சிறுவனின் மிதிவண்டி பூங்காவிற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சிறுவனின் பெற்றோருக்கு தெரியாத எண்ணிலிருந்து ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. பணத்தை கொடுத்தால்தான் சிறுவனை திரும்ப அனுப்பமுடியும் என்றும் சிறுவனின் பெற்றோரை மிரட்டியுள்ளனர். இதன் அடிப்படையில், ஹுளிமாவு காவல் நிலையத்தில் காணாவில்லை மற்றும் கடத்தல் தொடர்பாக வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில், காவல்துறையினர் சிறுவனின் பெற்றோருக்கு அழைத்த அழைப்பாளரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

குருமூர்த்தி மற்றும் கோபாலகிருஷ்ணா
குருமூர்த்தி மற்றும் கோபாலகிருஷ்ணா
பெங்களூரு - பாதி எரிந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்ட 13 வயது சிறுவனின் உடல்
தேனிலவு சென்ற மருத்துவ தம்பதி உயிரிழந்த பரிதாபம்; 1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

இதற்கிடையே நேற்று (வியாழக்கிழமை) மாலை, கக்கலிபுரா சாலைக்கு அருகிலுள்ள ஒரு வெறிச்சோடிய பகுதியில் நிஷித்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் உடல் பாதி எரிந்த நிலையில், காலணிகள் மற்றும் உடைகள் கருகிய நிலையில் கிடந்துள்ளது.

இந்நிலையில் சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றசாட்டில் குருமூர்த்தி மற்றும் கோபாலகிருஷ்ணா என்ற இருவரை போலீசார் நேற்று இரவு பன்னர்கட்டா காவல் நிலைய எல்லைக்குள் வைத்து மடக்கினர். இருவரும், கைது செய்யும்போது, போலீசாரை கொடிய ஆயுதங்களால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் தாக்குதலைத் தொடர்ந்ததால், போலீசார் தற்காப்புக்காக ஆறு முறை சுட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்த குருமூர்த்தி மற்றும் கோபாலகிருஷ்ணா இருவரும் ஆரம்ப சிகிச்சைகளுக்காக ஜெயநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பெங்களூரு - பாதி எரிந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்ட 13 வயது சிறுவனின் உடல்
தேனிலவு சென்ற மருத்துவ தம்பதி உயிரிழந்த பரிதாபம்; 1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

மேலும், நடத்தப்பட்ட விசாரணையில், சிறுவனின் வீட்டில் முன்னாள் ஓட்டுநரான குருமூர்த்தி என்பவர் இருந்துள்ளார். மேலும், அவர் அந்த குடும்பத்திற்கு நன்கு பரிட்சயமானவர் என்றும், இந்தக் குற்றத்தின் பின்னணியில் இவர்தான் மூளையாகச் செயல்பட்டார் என்றும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது, இவர்கள் எந்த நோக்கத்திற்காக சிறுவனை கடத்தினர் என்றும், இந்த கடத்திலில் இருவர் மட்டும்தானா? அல்லது பலர் இருக்கிறார்களா? என்றும் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com