கர்நாடகா: பள்ளி சென்ற 13 வயது சிறுமி போகும் வழியிலேயே மாரடைப்பால் சுருண்டு விழுந்து மரணம்!

கர்நாடக மாநிலம் சிக்கமங்களுரு மாவட்டத்தில் பள்ளிக்கு நடந்து சென்ற 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுமி
உயிரிழந்த சிறுமிபுதியதலைமுறை

சிக்கமங்களுரு மூடிகெரே தாலுகாவில் உள்ள கேசவலு ஜோகண்ணனகெரே கிராமத்தில் வசிக்கும் 13 வயது சிறுமி ஸ்ருஸ்தி, அங்குள்ள தராதஹள்ளி தொடக்கப்பள்ளியில் 7 ம் வகுப்பு பயின்று வந்தார். இந்தநிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு நடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக சிறுமி திடீரென சுருண்டு கீழே விழுந்தார்.

அப்போது, அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு உடனடியாக மூடிகெரே நகரில் உள்ள அரசு எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக கூறியுள்ளனர். சிறுமியின் இறப்புக்காண காரணம் மாரடைப்பு என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிறுமியின் உடலை வீட்டிற்கு கொண்டு சென்ற பெற்றோர், கண்ணீரில் மூழ்கியது சோகத்தை ஏற்படுத்தியது. வழக்கம்போல பள்ளிக்கு சென்ற 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த சிறுமி
உயர்க்கல்வித்துறை அமைச்சர் யார்? முதல்வரின் கோரிக்கையை ஏற்றார் ஆளுநர்...!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com