அமைச்சர் ராஜகண்ணப்பன்
அமைச்சர் ராஜகண்ணப்பன்pt web

உயர்க்கல்வித்துறை அமைச்சர் யார்? முதல்வரின் கோரிக்கையை ஏற்றார் ஆளுநர்...!

பொன்முடி வகித்து வந்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தார். ஆளுநர் அதை ஏற்று ஒப்புதல் அளித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவர் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருடைய தண்டனை விவரங்களை இன்று அறிவித்தது. அதன்படி பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறையும், 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ஜனவரி 22-க்குள் அவர் சரணடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில் அவரை கைது செய்ய கீழமை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாமென தெரிவித்துள்ளது.

அமைச்சர் ராஜகண்ணப்பன்
🔴LIVE: சொத்துக்குவிப்பு வழக்கு - தண்டனை விவரம் இதுதான்; பதவி இழந்தார் பொன்முடி.. சரணடைய அவகாசம்!

இதனால் பொன்முடி தன் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தார். அவர் வகித்து வந்த துறைகள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வேண்டி முதலமைச்சர் ஆளுநருக்கு (இன்று தீர்ப்பு வந்த பின்) பரிந்துரைத்திருந்தார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன்
பொன்முடி வகித்து வந்த துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு!

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்ற ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பனுக்கு உயர்க்கல்வி, அறிவியல் தொழிநுட்பம் உள்ளிட்ட துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ராஜகண்ணப்பனிடம் இருந்த கதர், கிராமத்தொழில் துறை அமைச்சர் ஆர். காந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் காந்தி தற்போது கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவி மாற்றங்கள் குறித்து, நாளை பொறுப்பு ஏற்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com