\
Jio platforms
Jio platformsReuters

1.3 கோடி முதலீட்டாளர்கள்... உலக சாதனைப் படைத்த Jio Platforms

இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ: ஜியோ பிளாட்பார்ம்ஸ் ரூ.30,213 கோடி நிதி திரட்டும் இலக்கு
Published on: 
Summary

ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம் தனது ஐபிஓ மூலம் 1.25 கோடிக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளது. ரூ.30,213 கோடி நிதி திரட்டும் இலக்குடன் இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓவாகும். முதல் நாளிலேயே 100% சப்ஸ்கிரைப் செய்யப்பட்டு, 22 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

செய்தியாளர் - M.மீரா

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தைச் சேர்ந்த ஜியோ பிளாட்பார்ம்ஸ் (Jio Platforms) நிறுவனம், தனது ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டில் (IPO) உலகளாவிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. தனது பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்த ஐபிஓ (IPO) மூலம் இரண்டு முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளது.

1 கோடிக்கும் (10 மில்லியன்) அதிகமான விண்ணப்பங்களைப் பெற்ற முதல் ஐபிஓ என்ற உலக சாதனையை ஜியோ படைத்துள்ளது. இதன் இறுதி விண்ணப்பங்களின் எண்ணிக்கை சுமார் 1.25 கோடிக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. (இதற்கு முன்பு வாரீ எனர்ஜிஸ் (Waaree Energies) நிறுவனம் பெற்ற 97 லட்சம் விண்ணப்பங்களே உலக சாதனையாக இருந்தது).

Jio
Jio ANI

இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ (India's Largest IPO): ரூ. 30,213 கோடி நிதி திரட்டும் இலக்குடன் வெளியான இந்த ஐபிஓ, இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றிலேயே மிகப் பெரிய பொதுப் பங்கு வெளியீடு (Largest IPO) என்ற சாதனையைப் படைத்துள்ளது. (இதற்கு முன்பு ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ரூ. 27,870 கோடி திரட்டியதே சாதனையாக இருந்தது)

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் ஜியோவிடம் உள்ளன. மெட்டா, கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களும் ஜியோவில் முதலீடு செய்துள்ளன. இந்நிலையில், அரசுக்குச் செலுத்த வேண்டிய கடனை அடைப்பதற்காக ரூ.30,213 கோடி திரட்டும் நோக்கில் ஜியோ பங்கு வெளியீட்டை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பங்குகளின் விலை ஒரு பங்குக்கு ரூ1065 முதல் ரூ1119 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால் சிறு முதலீட்டாளர்களும் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

jio
jioANI

பங்குகள் விற்பனைக்கு வந்த முதல் நாளிலேயே, வெறும் 100 நிமிடங்களில் இந்த ஐபிஓ முழுமையாக (100%) சப்ஸ்கிரைப் செய்யப்பட்டு அதிவேக சாதனை படைத்தது

இறுதி நாளான அக்டோபர் 23 அன்று, இந்த பொதுப் பங்கு வெளியீடு ஒட்டுமொத்தமாக 22 மடங்குக்கும் அதிகமாக சப்ஸ்கிரைப் ஆகியுள்ளது. தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் (QIB) பிரிவு 70 மடங்குக்கும் மேல் பங்குகளைக் கோரி ஏலம் எடுத்துள்ளனர்.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் இந்த பிரம்மாண்ட வெளியீடு, உலக அரங்கில் இந்தியப் பங்குச் சந்தையின் வலிமையை நிரூபித்துள்ளது. அக்டோபர் 28 அன்று இந்த பங்குகள் மும்பை (BSE) மற்றும் தேசிய (NSE) பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.

Jio platforms
21 ஆண்டுகளில் 24 முறை இடமாற்றம்! அதிரடிக்குப் பெயர்போன ஐஏஎஸ் அதிகாரி.. யார் இந்த துக்காராம் முண்டே?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com