காது கேளாத, வாய்ப்பேச முடியாத 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
மத்தியப்பிரதேசத்தில் காது கேளாத வாய் பேச முடியாத 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் அரசு ஓய்வு இல்லத்திற்குப்பின்பு ஒரு குடிசையில் வசித்து வந்துள்ளார் 11 வயதான காது மற்றும் வாய் பேசமுடியாத சிறுமி ஒருவர்.
இவர் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி காணாமல் போயுள்ளார். காணாமல் போன அடுத்தநாளே பலத்த காயத்துடன் ஒரு அடர்ந்த காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுமியை கண்ட சிலர், சிறுமிக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டிருந்ததை கண்டனர் . எனவே, உடனடியாக அருகிலிருந்த ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுமியின் உடல்நலனில் எத்தகைய முன்னேற்றமும் இல்லை.. இதனால் , போபாலில் உள்ள ஹமீடியா மருத்துவமனைக்கு அழைத்து சென்று இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை..
இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ( 7.2.2025) சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், குற்றவாளி யார் என்பது குறித்து தேடும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், போலிசார் முழு வீச்சில் குற்றவாளியை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.