\
டெல்லி
டெல்லிமுகநூல்

டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அடுத்த நொடியே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

டெல்லி தலைமைச் செயலகம்: ஆவணங்கள், கோப்புகள் வெளியே செல்லக் கூடாது - துணைநிலை ஆளுநர் உத்தரவு
Published on

டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, தலைமைச் செயலகத்தில் இருந்து எந்த கோப்பையையும், ஆவணங்களையும் வெளியே எடுத்துச்செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லி துணைநிலை ஆளுநரான V K Saxena உத்தரவின்படி, பொதுநிர்வாகத்துறை சார்பில் அனைத்துத்துறைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எந்த முன் அனுமதியும் இல்லாமல், அனைத்துத்துறைகள், ஏஜென்சிகள், அரசு நிர்வாக மையங்களில் இருந்து எந்தக் கோப்புகளையும், ஆவணங்களையும் கம்ப்யூட்டர்களையும் தலைமைச்செயலகத்துக்கு வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லி தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்துத்துறை பொறுப்பாளர்களும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி
டெல்லி | கெஜ்ரிவால் To மணிஷ் சிசோடியா.. 5 ஆம் ஆத்மி தலைவர்கள் தோல்வி.. காங்கிரஸ் தான் காரணமா?

முன்பு போலவே தலைமைச்செயலகம் செயல்படும் என்றும், அதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆவணங்கள், அலுவலக கோப்புகள், பதிவுகள், தரவுகள், மடிக்கணினிகள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை யாரும் வெளியே எடுத்துச்செல்வதோ, வெளியே அனுப்புவதோ கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com