உ.பி | 10, 13 வயது பிஞ்சுகளுக்கு பாலியல் தொல்லை; ஆண் நண்பருக்காக குழந்தைகளை மிரட்டி வைத்திருந்த தாய்

உத்தரப்பிரதேசத்தில், கணவர் இறந்தபிறகு தனது மகளையும் பாலியல் தொழிலில் தள்ள நினைத்த தாய்... இதனால் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் கேட்போரின் நெஞ்சத்தை பதைப்பதைக்க வைத்துள்ளது.
உத்திரப்பிரதேசம்
உத்திரப்பிரதேசம்முகநூல்

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர், கடந்த ஜனவரி 20 ஆம் தேதி டெல்லியில் உள்ள தெருக்களில் தனியாக சுற்றி திரிந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக டெல்லி போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

வன்கொடுமை
வன்கொடுமைகோப்புப்படம்

இதனையடுத்து, போலீஸார் அக்குழந்தையை மீட்டு குழந்தை நல பராமரிப்புக் குழுவில் ஒப்படைத்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலை அறிந்துள்ளனர். இதனையடுத்து, சிறுமி வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணம் என்ன என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அதிரச்சி தரும் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்து போலீஸாரிடம் சிறுமி தெரிவிக்கையில், “உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் நானும் எனது 13 வயது அண்ணனும் அம்மாவுடன் வசித்து வந்தோம். முன்னதாக எங்களின் தந்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், நானும் அண்ணனும் எங்களின் தந்தை வழி தாத்தா பாட்டியுடன்தான் வசித்து வந்தோம்.

கடந்த வருடம்தான் எங்களின் தாய் எங்கள் இருவரையும் காசியாபத்தில் உள்ள அவரின் வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர், எங்களின் வீட்டிற்கு அடிக்கடி என் அம்மாவின் ஆண் நண்பரொருவர் வருவார். அவர் என்னிடம் பலமுறை தவறாக நடந்து கொண்டுள்ளார். இதை வெளியில் யாரிடமும் கூறகூடாது என என் அம்மா பலவகைகளில் சித்திரவதைகளை செய்துள்ளார்.

அது மட்டுமல்லாது, என் சகோதரரையும் பாலியல் துன்புறுத்துக்கு உள்ளாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த என் அண்ணன், வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். என் தந்தை இறந்தநிலையில், என் தாய் பாலியல் தொழிலில் ஈடுபட்டார். இப்போது நான் பெரிய பெண் ஆனதும் என்னையும் அத்தொழிலில் ஈடுபடுத்த நினைத்தார். அதனால், நானும் அண்ணனைபோல விட்டை விட்டு வெளியேறிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

உத்திரப்பிரதேசம்
Women's Day | பாலியல் வன்கொடுமைகளுக்கு பழகிவிட்டதா இந்தியா? தொடரும் கொடூரங்களுக்கு தீர்வுதான் என்ன?

மேலும், இதுதொடர்பாக காவல்துறை உதவி ஆணையர் தெரிவிக்கையில், “சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் டெல்லியில்தான் வசிக்கிறார் என்றும், அவர் பெயர் ராஜு என்றும் கூறியுள்ளார். சிறுமி, ஜனவரி 20-ம் தேதி காணாமல் போயிருக்கிறார். இருந்தபோதிலும் மகளை காணவில்லை என்று தாய் புகார் அளிக்கவில்லை. குற்றத்தை மறைக்க இருவரும் இச்சிறுமியை சித்திரவதை செய்துள்ளனர். கட்டிங் பிளையரை வைத்து இவரை மிரட்டியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமைமுகநூல்

ஆரம்பத்தில் ஜனவரி மாதம் டெல்லி காவல்துறையால் சிறுமி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது, பின்னர் ஏப்ரல் 9 ஆம் தேதி லோனி பார்டர் காவல்நிலையத்தில் முழு விசாரணையின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி, ராஜூ என்ற அந்த நபருக்கு மிகவும் பயந்துள்ளார். விசாரணையில்கூட, தன் வளர்ப்பு தந்தை ராஜூ தன்னை பாலியல் வன்கொடுமை செய்தாரென்றே அவர் கூறியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து குற்றவாளிகளை காவல்துறை தேடிவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com