பாஜக எம்.பிக்கள் 10 பேர் ராஜினாமா! பின்னணி என்ன?

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெற்ற பாஜக எம்.பிக்கள் 10 பேர் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
பாஜக, நாடாளுமன்றம்
பாஜக, நாடாளுமன்றம்ட்விட்டர்

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த மாதம் (நவம்பர்) சட்டப்பேரவை நடைபெற்றது. இதில் மிசோரமைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது. டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற மிசோரம் வாக்கு எண்ணிக்கையில் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடித்துள்ளது.

காங்கிரஸ் - பாஜக
காங்கிரஸ் - பாஜக முகநூல்

எனினும் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில், புதிய முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தானில், வசுந்தரா ராஜே, தியா குமாரி மற்றும் பாபா பாலக்நாத் ஆகிய 3 பேரில் ஒருவர் முதலமைச்சராவார் என்று கூறப்படுகிறது. சத்தீஸ்கரில், மூத்த தலைவர் ராமன் சிங், முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளராக கருதப்படுகிறார். இதேபோல், மத்தியப் பிரதேசத்தில் நான்கு முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான், ஐந்தாவது முறையாக மீண்டும் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிசோரமில், ஜோரம் மக்கள் இயக்கம் தலைவர் லால்துஹோமா முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக, அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டியை அக்கட்சி மேலிடம் தேர்வு செய்துள்ளது.

இதையும் படிக்க: “கோ மூத்திர மாநிலங்கள்”-திமுக எம்பி செந்தில்குமார் பேச்சால் வெடித்த சர்ச்சை! நடந்ததுஎன்ன? முழுவிபரம்

இந்த நிலையில், இம்மாநில தேர்தல்களில் பாஜக சார்பில் சில எம்.பிக்கள், வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டனர். அவர்கள் தற்போது நடைபெற்ற் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் இந்த எம்.பிக்கள் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர். சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற 12 எம்.பிக்களில் 10 பேர் பிரதமர் மோடி மற்றும் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து ராஜினாமா செய்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நரேந்திர தோமர், ராஜ்யவர்தன் ரத்தோர்
நரேந்திர தோமர், ராஜ்யவர்தன் ரத்தோர்ட்விட்டர்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மிசோரமைத் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களுக்கு பாஜகவைச் சேர்ந்த 21 எம்.பிக்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதில் 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர். முன்னதாக, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தலா 7 எம்.பிக்களும், சத்தீஸ்கரில் 4 எம்.பிக்களும், தெலங்கானாவில் 3 எம்.பிக்களும் போட்டியிட்டனர். அதன்படி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நரேந்திர தோமர், பிரஹலாத் சிங் படேல், ரித்தி பதக், ராகேஷ் சிங், உதய் பிரதாப் சிங் ஆகிய 5 பேரும், சத்தீஸ்கரைச் சேர்ந்த அருண் சாவோ, கோமதி சாய் ஆகிய 2 பேரும், ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜ்யவர்தன் ரத்தோர், தியா குமார், கிரோரி லால் மீனா ஆகிய 3 பேரும், இன்று தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதையும் படிக்க: மீண்டும் ஓர் எல்லை தாண்டிய காதல்: ஐந்தரை ஆண்டு காத்திருப்புக்குப் பின் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com