உலகின் விலையுயர்ந்த தலையணை எது தெரியுமா? - அசர வைக்கும் தகவல்கள் இதோ!

உலகின் விலையுயர்ந்த தலையணை எது தெரியுமா? - அசர வைக்கும் தகவல்கள் இதோ!
உலகின் விலையுயர்ந்த தலையணை எது தெரியுமா? - அசர வைக்கும் தகவல்கள் இதோ!

நைட் ஷிஃப்ட், வேலைப்பளு, மன உளைச்சல் என பல காரணிகளால் பலரும் தூக்கமின்மையால் தவித்து வருகிறார்கள். இதற்காக டாக்டரை பார்த்து ட்ரீட்மெண்ட் எடுத்தும், சந்தையில் கிடைக்கும் வகை வகையான தலையணை, மெத்தைகளை வாங்கி தூங்க முற்பட்டாலும் தூக்கம் வந்தபாடில்லை என புலம்புவோர் உண்டு.

ஆனால் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்க, ஒரு தலையணை வாங்க வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் அரை கோடியை செலவிட வேண்டும். ஆமாங்க. சரியாத்தான் படிக்கிறீங்க. உலகத்துலயே அதிக விலை கொண்ட தலையணை பற்றிதான் இப்போ நாம பார்க்கப்போறோம்.

இந்த பிரத்யேகமாக தலையணையை நெதர்லாந்தைச் சேர்ந்த பிசியோதெரப்பிஸ்ட்தான் கண்டுபிடிச்சு உருவாக்கியிருக்கிறார். இந்த தலையணையை உருவாக்குவதற்காக 15 வருட கடின உழைப்பை செலுத்தி, ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறாராம் டச்சு மருத்துவர் Thijs van der Hilst.

தலையணையின் அம்சத்தை பற்றி பார்ப்பதற்கு முன்பு, அதன் விலை என்னனு தெரிஞ்சுப்போம். டச்சு மருத்துவர் கண்டுபிடிச்ச அந்த ஒரு தலையணையின் விலை 57,000 டாலர். அதாவது இந்திய மதிப்புப்படி சுமார் 45 லட்சம் ரூபாய்.

இந்த தலையணையில் நீலக்கற்கள், தங்கம், வைரம் பதிக்கப்பட்டிருக்கிறது. ரோபோட்டிக் மில்லிங் மிஷினால் பஞ்சுகள் நிரப்பட்டுள்ள இந்த தலையணையின் ஜிப்பில் நான்கு வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதுபோக Sapphire எனும் ஜெம்ஸ்டோனும் இந்த தலையணையில் இருக்கிறதாம். 

3டி ஸ்கேனர்கள், பிரிண்டர்கள், கணித அல்காரிதம், மல்பெரி பட்டு, எகிப்திய பருத்தி மற்றும் 24 காரட் தங்க துணி ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த தலையணை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், வெறுமனே இந்த தலையணையை கொடுக்காமல் அதனை ஒரு பிராண்டட் பெட்டிக்குள் வைத்தே கொடுக்கிறார்கள். இந்த விலையுயர்ந்த தலையணையை பயன்படுத்துவதால் தூக்கமின்மையின் இருந்து விடுபட்டு நிம்மதியாக தூங்கலாம் என இதனை கண்டுபிடித்தவர் கூறியுள்ளார்.

ஆனால், இந்த தலையணையோட விலையை பார்த்து உண்மையில் தூக்கமே வந்தாலும் அதனை எவரேனும் திருடிடுவார்களோ என்ற அச்ச உணர்வினால் வந்த தூக்கம் கூட போய்விடுமே என இது குறித்து அறிந்தவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com