\
women
womenweb

35 வயதுக்குப் பிறகு பெண்களுக்கு ஏன் அடிவயிற்றுக் கொழுப்பு அதிகரிக்கிறது? காரணம் இந்த ஹார்மோனா?

ஸ்ட்ரெஸ் பெல்லி, ஹார்மோனல் பெல்லி என இரு வகை தொப்பை உருவாகி, இன்சுலின் எதிர்ப்பு, தூக்கமின்மை, முறையற்ற மாதவிடாய் போன்ற பிரச்னைகள் அதிகரிக்கின்றன.
Published on
Summary

35 வயதுக்குப் பிறகு பல பெண்களுக்கு அடிவயிற்றுக் கொழுப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் மாற்றங்கள் என மருத்துவர்கள் விளக்குகின்றனர். ஸ்ட்ரெஸ் பெல்லி, ஹார்மோனல் பெல்லி என இரு வகை தொப்பை உருவாகி, இன்சுலின் எதிர்ப்பு, தூக்கமின்மை, முறையற்ற மாதவிடாய் போன்ற பிரச்னைகள் அதிகரிக்கின்றன.

35 வயதைக் கடந்த பெண்கள் பலரும் வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு பிரச்னையால் பாதிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் பல மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான நிலையில், அதில் முக்கியமானது தொப்பை மற்றும் வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு. பல நேரங்களில் இதை ஒரே மாதிரியான தொப்பை என்று நினைத்துக் கொள்கிறோம், ஆனால் மருத்துவ ரீதியாக ஸ்ட்ரெஸ் பெல்லி (Stress Belly) மற்றும் ஹார்மோனல் பெல்லி (Hormonal Belly) என்று இரண்டு வகைகளாகப் இவை பிரிக்கப்படுகிறது.

women
women wev

அலுவலக வேலை, குடும்பப் பொறுப்புகள் மற்றும் போதிய தூக்கமின்மை காரணமாக உடலில் கார்டிசோல் (Cortisol) என்ற மன அழுத்த ஹார்மோன் அதிகமாகச் சுரக்கிறது. இது ரத்தத்தில் இன்சுலின் எதிர்ப்பை அதிகரித்து, அடிவயிற்று உறுப்புகளைச் சுற்றி கொழுப்பைச் சேமிக்கிறது. சர்க்கரை மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடத் தூண்டுவது, திடீர் சோர்வு, தூக்கமின்மை ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

கார்டிசோல் அளவைக் குறைக்க சீரான தூக்கம், தியானம், உடற்பயிற்சி மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகள் உள்ளிட்டவை அவசியம். பெண்களுக்கு 35 வயதிற்குப் பிறகு ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் அளவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் இடுப்பு மற்றும் தொடைகளில் சேர வேண்டிய கொழுப்பு, மெதுவாக வயிற்றுப் பகுதிக்கு மாறத் தொடங்குகிறது.

women
women web

இதுவே, ஹார்மோன் மாற்றத் தொப்பை எனக் கூறப்படுகிறது. முறையற்ற மாதவிடாய், உடல் சூடு போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். ஹார்மோன் மாற்றங்களைச் சமாளிக்க எடை தூக்கும் உடற்பயிற்சிகள், வைட்டமின் டி, கால்சியம் மற்றும் புரத உணவுகள் பெரிதும் உதவுகின்றன. திடீரென கடுமையாக உணவைக் குறைப்பதை விட ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்களே நிலையான பலனைத் தரும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

women
ஆயுளை நீட்டிக்கும் எளிய தசைப் பயிற்சிகள்.. புதிய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com