எலிக்காய்ச்சலின் அறிகுறி என்ன? வரும்முன் காக்க என்ன செய்ய வேண்டும்?

எலிக்காய்ச்சலின் அறிகுறி என்ன? வரும்முன் காக்க என்ன செய்ய வேண்டும்? விரிவாக அறிவோம்...
எலிகாய்ச்சல்
எலிகாய்ச்சல்கோப்புப்படம்

எலிக்காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது?

லெப்டோஸ்பைரோஸிஸ் எனப்படும் காய்ச்சல், ஸ்பைரோகீட்ஸ் என்ற சுருள்வடிவ பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இவ்வகை பாக்டீரியவால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் நமது உடலில் படும்போதும், பாக்டீரியா கிருமிகள் கலந்த தண்ணீரைக் குடித்தாலும் - காற்றைச் சுவாசிப்பதாலும் எலிக் காய்ச்சல் ஏற்படும்.

பாதிக்கப்பட்ட விலங்குகள் கடிப்பதாலும் நோய் பரவும். மாடு, பன்றி, எலி, நாய் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எலிக் காய்ச்சல் பரவுகிறது.

ஆனால், ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு இந்த பாக்டீரியா கிருமிகள் பரவாது.
எலிக்காய்ச்சல் அறிகுறிகள்
எலிக்காய்ச்சல் அறிகுறிகள்

அறிகுறிகள் என்னென்ன?

பாக்டீரியா கிருமிகள் உடலுக்குள் நுழைந்த ஏழு முதல் பன்னிரெண்டு நாள்கள் கழித்தே எலிக் காய்ச்சல் நோயின் அறிகுறிகள் தென்படும். முதல் வாரத்தில் குளிர்க்காய்ச்சல், நடுக்கம், தலைவலி, உடல் வலி, உடல் தளர்வு, கண்கள் சிவந்துபோதல், கண் கூச்சம், வயிற்று வலி, வாந்தி, உடலில் தடிப்புகள் போன்றவை ஏற்படும்.

எலிகாய்ச்சல்
மதுரை: “பிள்ளைகளை இழந்துடுவோமோன்னு பயமா இருக்கு” - 14 குழந்தைகளுக்கு எலிக்காய்ச்சல்!

அதன்பிறகு, சுமார் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை காய்ச்சல் இல்லாமல் இருக்கும். இரண்டாவது கட்டத்தில், கிருமிகள் பல்வேறு திசுக்களையும் உடல் உறுப்புகளையும் தாக்குவதால் பாதிப்பு ஏற்படும். கல்லீரல், சிறுநீரகம் அதிகமாக பாதிக்கப்படும்.

எலி
எலி

தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

எலிக் காய்ச்சலில் இருந்து தப்பிக்க முதல் நடவடிக்கையாக எலிகளை ஒழிக்க வேண்டும். விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர்நிலைகள் மற்றும் விளை நிலங்களில் வேலை செய்பவர்கள், உடல் முழுவதும் மூடக்கூடிய உடைகளை அணிய வேண்டும். கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.

நோய் பரவும் இடங்களில் வசிப்பவர்களும், நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்களும் முன்னெச்சரிகையாக மருந்துகளை முதலிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com