\
Verve-102 Treatment Targets Liver Gene to Lower Bad Cholesterol
மருத்துவ ஆய்வுx

மாத்திரை தேவையில்லை.. புதிய மரபணு சிகிச்சை.. இதய நோய்க்கு முற்றுப்புள்ளி!

மரபணு மாற்ற சிகிச்சையான வெர்வ்-102 குறித்து ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்’ வெளியிட்ட ஆய்வு, கல்லீரலில் உள்ள குறிப்பிட்ட மரபணுவை செயலிழக்கச் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை 62% வரை குறைக்க முடியும் என நிரூபிக்கிறது.
Published on

மருத்துவ உலகில் புரட்சிகரமான கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. மரபணுவை மாற்றி அமைக்கும் ஒரே ஒரு மரபணு சிகிச்சை மூலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை 62 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று புதிய ஆய்வு ஒன்று நிரூபித்துள்ளது. 'நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்' இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வின்படி, வெர்வ்-102 என்ற இந்த சோதனை முறை சிகிச்சை, கல்லீரலில் உள்ள குறிப்பிட்ட மரபணுவைச் செயலிழக்கச் செய்து கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

heart
heartFB

இதன் மூலம் இதய நோயாளிகள் ஆயுள் முழுவதும் தினமும் மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லாமல் போகலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்தியாவில் இதய நோய்களால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 28 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்த சிகிச்சை இதய நோய்த் தடுப்பில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Verve-102 Treatment Targets Liver Gene to Lower Bad Cholesterol
”சைக்கிள் ஓட்டுவதால் மூளை ஆரோக்கியம் மேம்படும்..” புதிய ஆய்வில் தகவல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com