”சைக்கிள் ஓட்டுவதால் மூளை ஆரோக்கியம் மேம்படும்..” புதிய ஆய்வில் தகவல்!
19 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் ஒருங்கிணைந்த முடிவுகள், சைக்கிள் ஓட்டுவதை அன்றாட பழக்கமாக்குவது உடல், மன ஆரோக்கியத்துக்கு பயனுள்ளதாக இருப்பதை காட்டுகின்றன. இயற்கை வெளிச்சத்தில் மிதமான வேகத்தில் சைக்கிள் ஓட்டுவது மனநிலையை மேம்படுத்தி, சமூக உறவுகளை வலுப்படுத்தி, மூளை செயல்பாடுகளை தூண்டுகிறது; பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 19 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 90 ஆய்வுகளின் முடிவுகள் இதனை உறுதிபடுத்தியுள்ளன.
இயற்கையான வெளிச்சத்தில் சைக்கிள் ஓட்டுவது மனநிலையை மேம்படுத்தி, சமூக உறவுகளை வலுப்படுத்துகிறது. மேலும், இது மனிதர்களின் கவனிப்புத்திறன், சுறுசுறுப்பு மற்றும் மூளையின்செயல்பாடுகளையும் அதிகரிக்கிறது. இருப்பினும், மிதமான வேகத்தில் சைக்கிள் ஓட்டுவதே மூளைக்கு நல்லது என்றும், மிகக் கடுமையான உடற்பயிற்சி தற்காலிகமாகச் சோர்வை ஏற்படுத்தலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பள்ளிப் பருவத்தினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கள் அன்றாட வாழ்வில் சைக்கிள் ஓட்டுவதை ஒரு வழக்கமாக மாற்றிக்கொள்வது ஒட்டுமொத்த உடல் மற்றும் மனஆரோக்கியத்துக்குச் சிறந்தது என இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

