அமெரிக்கா | புற்றுநோய் என நினைத்து கீமோதெரபி சிகிச்சை... இறுதியில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

புற்றுநோய் இருப்பதாக கூறி அமெரிக்கப் பெண் ஒருவருக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இறுதியில் அவருக்கு புற்றுநோய் இல்லை என கூறியுள்ளனர் மருத்துவர்கள்.
பாதிக்கப்பட்ட பெண் லிசா
பாதிக்கப்பட்ட பெண் லிசாட்விட்டர்

அமெரிக்காவை சேர்ந்தவர் லிசா மாங்க் (39). டெக்சாஸின் கல்லூரியொன்றில் உயர்க்கல்விப் பணியாளராக பணியாற்றி வந்த இவருக்கு, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில், லிசாவுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுநீரக கற்கள் இருப்பது தெரியவந்தது.

லிசா மாங்க்
லிசா மாங்க்முகநூல்

இருப்பினும் இது புற்றுநோயாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கவே, அதற்கும் பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அதில் மண்ணீரலில் உள்ள ரத்த நாளத்தில் புற்றுநோயின் அரிய வடிவமான ஆஞ்சியோசர்கோமாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து புற்றுநோயில் இருந்து விடுபட கடுமையான கீமோதெரபி சிகிச்சைக்கு இவர் ஆளாக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “இது புற்றுநோய் என மருத்துவர்கள் சொன்னபோது உண்மையில் நான் அதிர்ச்சியடைந்தேன். அதிகபட்சம் 15 மாதங்கள் மட்டுமே நான் உயிரோடு இருப்பேன் என்றனர். வீட்டிற்கு சென்று, அதுகுறித்து என் இரண்டு குழந்தைகளிடமும் கூற வேண்டி இருந்தது. இருந்தாலும் என் பிள்ளைகளிடம் என்னால் அதை சொல்ல முடியவில்லை.

ஒருகட்டத்தில் நோயை எதிர்த்து போராட வேண்டும் என்று முயற்சித்தேன். எனக்கு கேன்சர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது. ஆகவே, மார்ச் மாதத்தில் கீமோதெரபி சிகிக்சை மேற்கொண்டேன்.

இந்த சிகிச்சையின்போது, மிகுந்த முடி உதிர்வு, தளர்வு போன்ற பல பிரச்னைகளை எதிர்கொண்டேன். எனது தலைமுடி முழுவதையும் இழந்த பிறகு, வாந்தி, தோல் நிறமாற்றம் போன்ற பிரச்னைகளை சந்தித்தேன். பின்னும் இரண்டாம் கட்ட கீமோதெரபி சுற்றுக்கு அழைத்து செல்லப்பட்டேன். இதன்பின்னர் செவிலியர் ஒருவர் என்னை அழைத்து, கேன்சருக்கு எனக்கு ஏற்பட்ட அறிகுறிகள் குறித்து கேட்டார்.

கணியை உபயோகித்து கொண்டே என்னிடத்தில் பேசிக்கொண்டிருந்தார். பின் ஏதோ நினைத்துக்கொண்டு தீடீரென பேசுவதை நிறுத்திய அவர், என் முகத்தை ஒருநொடி பார்த்தார். உடனடியாக மருத்துவரின் அறையை நோக்கி விரைந்தார். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கழித்து வந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் லிசா
ஜெர்மனி - 29 மாதங்களில் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திய முதியவர்!

அப்போது என்னை அணுகிய மருத்துவர் ‘உங்களுக்கு கேன்சர் இல்லை’ என தெரிவித்தார். அப்போது நான் மிகவும் குழப்பம் அடைந்தேன். இருந்த போதிலும் கேன்சர் இல்லை என நான் சந்தோஷப்பட்டேன். பின்னரே எனக்கு தவறுதலாக சிகிச்சையளிக்கப்பட்டது தெரியவந்தது” என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட அறிக்கையை மருத்துவர்கள் சரியாக பார்க்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. “முதற்கட்ட சிகிச்சையின்போதே அவர்கள் என்னை சரிவர பரிசோதித்திருந்தால் கூட, இரண்டாம் சுற்று கீமோதெரபிக்கு நான் சென்றிருக்க மாட்டேன்” என்று லிசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறிழைத்த மருத்துவர்கள், லிசாவிடம் மன்னிப்பு கோர்வதற்கு பதிலாக ‘கேன்சர் இல்லாததற்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளனராம். இது அவரை மேலும் வேதனைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இந்த அலட்சியத்தால் கேன்சர் இல்லாதபோதும், கேன்சர் நோயாளிகள் எதிர்கொள்ளும் மனரீதியான மற்றும் பொருளாதார ரீதியான வேதனைகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ளார் லிசா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com