ஜெர்மனி - 29 மாதங்களில் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திய முதியவர்!

ஜெர்மனியில் 62 வயதான முதியவர் ஒருவர் 217 முறை கொரோனா தடுப்ப்பூசிகளை செலுத்திக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசிமுகநூல்

2019 ஆம் ஆண்டு உருவெடுத்த கொரோனா தொற்றின் கோரப்பிடியில் இருந்து நாமெல்லாம் தப்பித்துக்கொள்ள ஆயுதமாக கையில் எடுக்கப்பட்டது கொரோனா தடுப்பூசி. ஒவ்வொரு தடுப்பூசிக்கும் ஏற்ப இரண்டு - மூன்று டோஸ்கள் வரை கொரோனா தடுப்பூசி தரப்பட்டது. இதனால் தடுப்பூசி சோஸேஜ்களை பொறுத்து, 3 முறை மட்டுமே தடுப்பூசி செலுத்தினால் போதுமானது என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் அதனை ஏராளாமான முறையில் செலுத்தியுள்ள சம்பவம் சமூக வலைதளங்கைளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசிfreepik

ஜெர்மனியின் மாக்டேபர்க் பகுதியை சேர்ந்தவர் 62 வயதான முதியவர் ஒருவர்தான் இந்தக் காரியத்தை செய்தவர். இவர் கொரோனா தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள முதல்முறையாக 2021 ஆம் ஆண்டு கொரோனா தடுப்பூசியினை செலுத்தி கொண்டுள்ளார்.

இப்படி முதல் தடுப்பூசியை செலுத்திய அவர், கடைசி வரையில் செலுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை கொரோனா தடுப்பூசியை செலுத்தி வந்துள்ளார். இப்படியாக இதுவரையிலும் 217 முறை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார் என தெரிகிறது.

கொரோனா தடுப்பூசி
“இப்போதும் பரவுகிறது, இப்போதும் உருமாறுகிறது, இப்போதும் உயிரை கொல்கிறது கொரோனா” - WHO வேதனை!

இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், “ஜெர்மனியை சேர்ந்த அந்த முதியவர் ஒருவர் 217 முறை அதுவும் 29 மாதங்களில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி வந்துள்ளார்.

அவரின் உடலுக்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படவில்லை. இது அவரின் உடலின் அமைப்பினை பொறுத்தது. ஆனால் இது அனைவருக்கும் பொதுவானதாக இருக்காது.

இவர் விஷயத்தில் கொரோனா தடுப்பூசியின பொறுத்தவரை 3 முறை செலுத்தி கொண்டாலும் அல்லது 200 முறை செலுத்தி கொண்டாலும் ஒரே விதமான பாதுகாப்பினைதான் தருகிறது. இதற்காக பிறரும் அப்படி செய்யக்கூடாது. 3 முறை மட்டுமே ஊசி செலுத்தினால் போதும். அதுவும் உங்கள் மருத்துவரிடம் பேசிவிட்டே செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி
‘தண்ணீல கண்டம்!’ - விசித்திர நோயால் அவதிப்படும் அமெரிக்க பெண்!

இந்த முதியவர் நான்கு நாட்களுக்கு ஒருமுறை என தடுப்பூசி எடுத்து வந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. பைசர், மாடர்னா போன்ற 8 விதமான தடுப்பூசிகளை செலுத்தியுள்ளார் இவர். தடுப்பூசி செலுத்த பயந்தவர்களின் மத்தியில் இப்படி ஒருவர் பல நூறு முறைகள் தடுப்பூசி செலுத்தியிருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை வாசிக்கும் யாரும்கூட, அப்படி செலுத்திக்கொள்ள வேண்டாம்... ஏனெனில் இத்தனை முறை மருத்துவ ஆலோசனையின்றி தடுப்பூசி செலுத்துவது ஆபத்தில் முடியக்கூடும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com