உலகிலேயே மிக குறைந்தகால பிரசவத்தில் பிறந்த குழந்தைமுகநூல்
ஹெல்த்
உலகிலேயே மிக குறைந்தகால பிரசவத்தில் பிறந்த குழந்தை.. கின்னஸ் சாதனை!
உலகிலேயே மிக குறைந்தகால பிரசவத்தில் பிறந்த குழந்தை எங்கு பிறந்தது தெரியுமா? தற்போது அக்குழந்தை கின்னல் சாதனையையும் படைத்திருக்கிறார்.
உலகிலேயே மிக குறைந்தகால பிரசவத்தில் பிறந்து உயிர் பிழைத்த குழந்தையென, அமெரிக்க குழந்தை ஒன்றுக்கு கின்னஸ் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நாஷ் கீன்
நாஷ் கீன் என பெயரிடப்பட்டுள்ள ஆண் குழந்தை, அவரது தாய் ஐந்தரை மாத கர்ப்பிணியாக இருக்கும்போதே பிறந்துள்ளது. தற்போது நாஷ் கீனுக்கு ஒரு வயதாகும்போதிலும், குழந்தைக்கு குழாய் மூலமாக ஆக்சிஜன் தேவைப்படுகிறது. குழந்தைக்கு இருக்கும் இதய பிரச்சினை சரியாகிவிடும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.