எடைகுறைப்பு தாமதமாகிறதா? இந்த உணவுப் பழக்கங்களை மாற்றிக்கோங்க!

எடைகுறைப்பு தாமதமாகிறதா? இந்த உணவுப் பழக்கங்களை மாற்றிக்கோங்க!

எடைகுறைப்பு தாமதமாகிறதா? இந்த உணவுப் பழக்கங்களை மாற்றிக்கோங்க!
Published on

நம்மை சுற்றி பார்த்தாலே பலர் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பர். அதில் சிலருக்கு சீக்கிரமாகவும், சிலருக்கு தாமதமாகவும் எடைகுறைப்பு நிகழும். அதற்கு மெட்டபாலிசம், டயட் மற்றும் உடற்பயிற்சி முறைகள் என பலவும் காரணமாக இருக்கும். இது ஒவ்வொருவரின் உடல்வாகு மற்றும் வாழ்க்கைமுறைக்கு ஏற்றவாறு மாறுபடும்.

உடல் எடையை குறைக்க கலோரி குறைவான டயட்டை பின்பற்ற வேண்டும். அதாவது உடல் எரிக்கும் கலோரிகளை விட உட்கொள்ளும் கலோரிகளானது குறைவானதாக இருக்கவேண்டும். அதற்காக உணவு சாப்பிடுவதை நிறுத்தவேண்டும் அல்லது உணவின் அளவை முற்றிலும் குறைக்கவேண்டும் என்று அர்த்தமில்லை.

உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஊட்டச்சத்து தரும் உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம் கொழுப்புகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. சில உணவு பழக்கவழக்கங்கள் எடை குறைப்பின் பாதையில் தடையாக நிற்கக்கூடும். அவற்றைக் கண்டறிந்து அதனை மாற்றிக்கொள்ளவேண்டும். கீழ்க்கண்ட சில உணவு பழக்கங்கள் எடை குறைப்பு பயணத்தை மெதுவாக்கலாம்.

1. போதுமான புரதச்சத்து எடுத்துக்கொள்ளாமை. தினசரி உணவில் புரதச்சத்து இடம்பெறுவது அவசியம். இது உடல் எடையை குறைக்க உதவுவதுடன் தசைகளையும் வலுப்படுத்துகிறது. மேலும் இது நீண்ட நேரம் பசியை தூண்டாமல் இருப்பதால் இடையிடையே நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கத்தை கைவிட உதவுகிறது.

2. சமையலில் அதிக எண்ணெய் பயன்படுத்துதல். சமைக்கும்போது அதிக எண்ணெய் சேர்ப்பது உணவில் கலோரிகளின் அளவை அதிகரிக்கும். எடை குறைப்பில் உள்ளவர்கள் இதனை கட்டாயம் தவிர்க்கவேண்டும். பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றுவதற்கு பதிலாக ப்ரஷ்ஷால் பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

3. அளவுக்கதிகமாக சாஸ் மற்றும் பிற பொருட்களை பயன்படுத்துவது. இவை உணவுக்கு சுவையையும், பலவித நிறங்களையும் கொடுக்கலாம். அதேசமயம் உணவின் கலோரிகளின் அளவையும் அதிகரிக்கும். இதுபோன்ற சுவையூட்டிகளில் சர்க்கரை கூறுகள் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால் எடை குறைப்புக்கு சிறந்ததல்ல.

4. ஆரோக்கிய உணவுகளை அதிகமாக சாப்பிடுதல். நட்ஸ், பட்டர் போன்ற உணவுகள் எடை குறைப்புக்கு ஆரோக்கியமானதுதான். ஆனால் இதுபோன்ற நல்ல கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை அதிகளவில் சாப்பிட்டால் அது கலோரிகளின் எண்ணிக்கையையும் அதே அளவுக்கு அதிகரிக்கும். இது உங்கள் எடைகுறைப்பு பயணத்தின் நடுவே தடுப்புசுவராக நிற்கும். எனவே தினசரி எடுத்துக்கொள்ளும் புரதத்தின் அளவை கணக்கிடுவது எடை குறைப்பின் வழியை விஸ்தாரமாக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com